பக்கம் எண் :

சூடாமணிப் படலம்459

- நீரை உடைய கடலினும்மிகுந்து (அதனால்) அது; ஆற்றொடு மீள -
ஆற்றுடன் திரும்ப (அதுபோல); வேலை சூழ் - கடலால் சூழப்பெற்ற;
ஞாலம் முற்றுறு -
உலகம் முடிவடையும்; கடையுகத்து - யுகத்தின் முடிவிலே
(அனைத்தையும் உண்டு); நச்சு அறாக் காலனும் - கொலைவிடத்தன்மை
நீங்காத யமனும்; வெறுத்து - (அரக்கரை உண்டு) தெவிட்டிப் போய்;
உயிர்கால -
உண்ட உயிர்களைக் கக்குதலைக்; காண்டி - காண்பாயாக.

     கடலில் இரத்தவெள்ளம் அதிகரித்தது. அது ஆற்றுவழியாகத்
திரும்பிற்று. அதுபோல் காலன் தெவிட்டியதால் உயிர்களைக் கக்கினான் என்க.
கடல் ஆற்றின் வழியே இரத்தத்தை வெளியே தள்ளிற்று; யமன் வாய் வழியே
உயிரைக் கக்கினான். உயிர்கால - பெருமூச்சுவிட. அதிகம் உண்டமையால்
எமன் பெருமூச்சு விட்டான் என்பாரும் உளர். காலன் - யமனின் ஏவல்
செய்வோன் என்பாரும் உளர். காலன்  கூற்றத்திற்கு ஏவல் செய்பவனும் ஆம்
என்று இனியர் வரைந்தார். (சீவக 1477) ஞான வாசிட்டம், காலன் எவற்றிற்கும்
அடங்காதவன் என்று பேசும். நச்சு - விடம்.                     (63)

5408.

‘அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும்
மணம் கிளர்கற்பகச் சோலை வாவிவாய்,
பிணங்குறு வால்முறை பிடித்து, மாலைய
கணம் கொடுகுரக்குஇனம் குளிப்பக் காண்டியால்.

     இளம் - இளம்பருவமுடைய; அணங்கு மகளிரொடு - தெய்வ மகளிர்
போலும் பெண்களுடன்; அரக்கர் ஆடுறும் - அரக்கர்கள் நீராடும்; மணம்
கிளர் -
வாசனை மிகுந்த; கற்பகச் சோலை - கற்பகம் அமைக்கப் பெற்ற;
வாவிவாய் -
பொய்கையின் கண்ணே; குரங்கு இனம் - குரங்குக் கூட்டம்;
பிணங்குறு வால் -
மாறுபட்டு வளைந்துள்ள வாலை; முறைபிடித்து -
வரிசையாகப் பற்றிக்கொண்டு; மாலைய - வரிசைகளை உடையதாய்;
கணங்கொடு -
கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு; குளிப்ப - நீராடுதலை;
காண்டி -
காண்பாயாக.

     ஆல் - அசை.அரக்கர்கள் நீராடிய பொய்கையில் குரங்குகள் நீராடும்
என்க. அரக்கர் ஆடுறும் கற்பகச் சோலை - வாவி. இதுவே தழாத் தொடர்.
ஆடுறும் என்னும் எச்சம் சோலையைத் தழுவாமல் வாவியைத் தழுவிற்று.
குடர் முறை முறை பிடித்து - கழுதினம் ஆடக் காண்டி என்று பாடம்
கொண்டு, அரக்கர்களின் குடலைப் பிடித்தபடி