பேய்கள் நீராடுவதைப்பார் என்று உரை கூறப் பெற்றது. பேய்கள் போர்க்களத்தி்ல் ஆடுவதாகப் பேசப்படுவதே பெருவழக்கு. (64) | 5409. | ‘செப்புறல் என் பல ? தெய்வ வாளிகள், இப் புறத்துஅரக்கரை முருக்கி ஏகின, முப் புறத்து உலகையும் முடிக்க மூட்டலால், அப் புறத்துஅரக்கரும் அவியக் காண்டியால். |
பல செப்புறல் -பலவற்றைக் கூறுவதால்; என் - என்ன பயன் விளையும்; தெய்வ வாளிகள் - (இராமபிரானின்) கடவுள் தன்மை பெற்ற அம்புகள்; இப்புறத்து - இந்த உலகில் உள்ள; அரக்கரை முருக்கி - அரக்கர்களை அழித்து; ஏகின - அப்பாலும் போய்; புறத்து - வெளியில் உள்ள; முவ்வுலகையும் - மூன்று உலகங்களையும்; முடிக்க - தாக்குவதாலே; அப்புறத்து அரக்கரும் - அந்தப் பக்கத்தில் உள்ள அரக்கர்களும்; அவிய - அழிவதை; காண்டி - பார்ப்பாயாக. இராமபிரானின்அம்புகள் இந்த உலக அரக்கர்களைக் கொன்று அப்பாலும் போய் முட்டுவதால் அப்பக்கத்தில் உள்ள அரக்கர்களும் அழிவதைப் பார்ப்பாயாக. தெய்வ வாளி - என்பதற்கு விதிபோலும் அம்பு என்றும் பொருள் கூறலாம். தெய்வ வாளி ஆகையால் தீயவர் உள்ள இடத்தை அறிந்து அவர்களைத் தண்டித்தன. முட்டல் - தாக்குதல். ஏகின என்னும் முற்று வினை எச்சப் பொருளில் வந்தது. ஆல் - அசை. (65) | 5410. | ‘ஈண்டு, ஒரு திங்கள், இவ் இடரி்ன் வைகுதல் வேண்டுவது அன்று;யான், விரைவின் வீரனைக் காண்டலே குறை;பினும் காலம் வேண்டுமோ ? ஆண்தகை இனிஒருபொழுதும் ஆற்றுமோ ? |
(தாயே) நீ - நீ; ஈண்டு -இந்த இலங்கையில்; ஒரு திங்கள் - ஒரு மாதம்; இடரின் - துன்பத்தி்லே; வைகுதல் வேண்டுவது அன்று - தங்கியிருக்க வேண்டாம்; யான் - நான்; விரைவி்ன் - வேகமாக; வீரனைக் காண்டலே - இராமபிரானைப் பார்ப்பதுதான்; குறை - எஞ்சியுள்ள செயல்; பி(ன்)னும் - கண்ட பிறகும்; காலம் வேண்டுமோ - இங்கு வர நல்லகாலம் பார்ப்பானோ ?; ஆண்டகை - ஆடவருள் |