பக்கம் எண் :

சூடாமணிப் படலம்463

எண்ணும் ஈட்டவோ -அவ்வேதனைகள் அளவிடக்கூடிய
தன்மையுடையனவோ.

     பித்து -பற்றின் மிகுதியால் உண்டாகும் உன்மத்த நிலை. கடையும்
போது தயிர்படும் கலக்கத்தைக் கவிஞர்கள் பலபடியாகப் பேசுவர். மதிக்க
அலைப்புண்ட வெண் தயிர் போல மறுகுறும் என் மதிக் கவலை என்பர்
பிள்ளைப் பெருமாள். உயிரையும், புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து
என்றதால் பெருமானின் காதல் வரம்பு புலனாகிறது. ஈடு - தன்மை. எண்ணுதல்
- அளவிடுதல்.                                              (69)

5414.

‘ “இந் நிலை உடையவன் தரிக்கும்” என்றியேல்,
மெய்ந் நிலைஉணர்ந்துழி விடை தந்தீதியேல்,
பொய்ந் நிலைகாண்டியால்; புகன்ற யாவும், உன்
கைந் நிலைநெல்லியங்கனியின் காட்டுகேன்.

(அம்மையே)

     மெய்ந்நிலை- (என்னுடைய சொல்லின்) உண்மைத் தன்மையை;
உணர்ந்துழி (உம்) - உணர்ந்த இடத்தும்; இந்நிலை உடையவன் - இந்த
நிலைமையில் இருக்கும் இராமபிரான்; தரிக்கும் என்றியேல் -
பொறுத்திருப்பான் என்பாயானால்; விடை தந்து - (அடியேனுக்கு) விடை
கொடுத்து; ஈதியேல் - அடையாளப் பொருளைத் தருவாயே ஆனால்; புகன்ற
யாவும் -
என்னால் கூறப்பட்டவை யாவற்றையும்; கைநிலை -
கையின்கண்ணே உள்ள; நெல்லிகனியில் - நெல்லிக் கனியைப் போல;
காட்டுகேன் - நிரூபித்துக் காண்பிப்பேன் (அப்போது); பொய்நிலை -
தரிக்கும் என்றது பொய்யான தன்மையை; காண்டி - பார்ப்பாய்.

     உணர்ந்துழியும்என்பதில் உள்ள உம்மை தொகையாக உள்ளது.
விடைதந்து அடையாளப் பொருள் வழங்க வேண்டும் என்பது அனுமன்
வேண்டுகோள்.                                              (70)

5415.

‘தீர்த்தனும், கவிக் குலத்து இறையும், தேவி ! நின்
வார்த்தை கேட்டுஉவப்பதன் முன்னர், மாக் கடல்
தூர்த்தன,இலங்கையைச் சூழ்ந்து, மாக் குரங்கு
ஆர்த்தது கேட்டு,உவந்து இருத்தி, அன்னை ! நீ.

     தேவி - தெய்வத்தன்மையுடையவளே; அன்னை - தாயே !; நீ - நீ;
தீர்த்தனும் - தூய்மையுடைய இராமபிரானும்; கவிக்குலத்து