பக்கம் எண் :

464சுந்தர காண்டம்

இறையும் - குரங்குகளின்தலைவனான சுக்கிரீவனும்; நின் வார்த்தை கேட்டு
-
உன்னுடைய சொற்களைக் கேட்டு; உவப்பதன் முன்னர் -
மகிழ்ச்சியடைவதற்கு முன்பே; மாக்குரங்கு - பெரிய குரங்குக் கூட்டம்;
மாக்கடல் தூர்த்தன - கரிய கடலை மேடு பண்ணி (அதன் வழியே வந்து);
இலங்கையைச் சூழ்ந்து - இலங்கையை முற்றுகை இட்டு; ஆர்த்தது -
ஆரவாரிப்பதை; கேட்டு - செவியில் ஏற்று; உவந்து இருத்தி -
மகிழ்ச்சியுடன் இருப்பாயாக.

     இராமன் உன்மொழி கேட்டு மகிழ்வதன் முன் நீ, குரங்குகளின்
ஆரவாரம் கேட்டு மகிழ்க. தீர்த்தன் - திருமால். இங்கு அச் சொல்
இராமபிரானைக் குறிக்கிறது. தீர்த்தன் என்று அறிந்ததோ (திருவவதாரம் 114)
இறை - அரசன். மன்னவன் மக்கட்கு இறை (திருக்குறள்) ஆர்த்தது - தொழிற்
பெயர் மாக்கடல் கருங்கடல். பெருங்கடல் என்றும் கொள்ளலாம். ஆழ்கடல்
என்பதே பலபிரதிகளில் காண்கின்றது. இப்பாடலை விரைவு நவிற்சியணி என்று
கூறி அலங்கார சாத்திரத்தை விரிவுபடுத்தலாம்.                    (71)

5416.

‘எண்ணஅரும் பெரும் படை, நாளை, இந் நகர்
நண்ணிய பொழுது,அதன் நடுவண், நங்கை ! நீ,
விண் உறுகலுழன்மேல் விளங்கும் விண்டுவின்,
கண்ணனை என்நெடும் வெரிநில் காண்டியால்.

     நங்கை - அம்மையே ! எண்ண அரும் பெரும் படை - கணக்கிட
முடியாத பெருஞ்சேனை; நாளை - நாளைய தினத்தில்; இந்நகர் நண்ணிய
பொழுது -
இந்த நகரை யடைந்த போது; அதன் நடுவண் - அந்தச்
சேனையின் நடுவில்; விண் உறு கலுழன் மேல் - விண்ணிலே பறக்கும்
கருடன் மேலே; விளங்கும் - பொலிவு பெறுகின்ற; விண்டுவின் -
திருமாலைப் போல; கண்ணனை - இராம பிரானை; என் - என்னுடைய;
நெடும் வெரிநில் - பெரிய தோள்களில்; நீ காண்டி - நீ பார்ப்பாயாக.

     எண்ணுதல் -கணக்கிடுதல். கருதுதல் என்றும் கூறலாம். கலுழன் -
கருடன். கண்ணன் - திருமால். இங்கே இராமபிரானைக் குறிக்கிறது.
கவிச்சக்கரவர்த்தி பல இடங்களில் இராமபிரானைக் கண்ணன் என்று குறிப்பார்.
‘கண்ணனைக் கண்ணில் நோக்கி கனிந்தனன்’ (கம்ப. 1965) கண்ணன் -
என்பது பாகதச் சொல் என்பர் பேராசிரியர்.