குரா - குரவம்(ஒருவகை மரம்) உன்னை மீட்காவிடில் இராவணனைச் சார வேண்டிய பாவம் இராமனைப் பற்றும் என்றனன். மேலே. 39 ஆம் பாடலின் (தோன்றா எழுவாயாக இருந்த) அனுமன் என்றனன் என்னும் பயனிலை கொண்டது. (74) சீதை கூறியஅடையாளச் சொற்கள் கலித்துறை 5419. | ஆக இம்மொழி ஆசு இல கேட்டு, அறிவுற்றாள்; ஓகை கொண்டுகளிக்கும் மனத்தள், உயர்ந்தாள்; ‘போகை நன்றுஇவன்’ என்பது, புந்தியின் வைத்தாள்; தோகையும், சிலவாசகம் இன்னன சொன்னாள்; |
ஆக - இவ்வாறாக; ஆசுஇல - குற்றம் இல்லாத; இம்மொழி கேட்டு - (அனுமன் கூறிய) இந்த மொழியைக் கேட்டு; தோகையும் - சீதா பிராட்டியும்; அறிவுற்றாள் - அறிவில் தெளிவுபெற்று (அதனால்); ஓகை கொண்டு -அன்புற்று; தளிக்கும் மனத்தள் - மகிழ்ச்சி பெற்ற உள்ளமுடையவளாய்;உயர்ந்தாள் - சிறப்புப் பெற்று; இவன் - இந்த அனுமன்; போகை நன்று -(இராமபிரான்பால்) செல்வது சிறந்தது; என்பது - என்னும் எண்ணத்தை;புந்தியில் வைத்தாள் - அறிவில் நிலை நிறுத்தி; இன்னன - இப்படிப்பட்ட;சிலவாசகம் - சில மொழிகளை; சொன்னாள் - கூறினாள். உவகை என்பது ஓகைஎன்று மருவிற்று. உவகை - அன்பு. அச்சமும் உவகையும் .... நிமித்தமும் என்னும் புறத்திணைப் பகுதிக்கு (36) நச்சர் வழங்கிய உரை காண்க. அவர் உவகை - அன்பு என்று வரைந்தார். தோகையும் என்பதில் உள்ள ‘உம்’ அசை. இக்கலித்துறை மா - விளம் - விளம் - விளம் - மா என்னும் சீர்களைப் பெற்று வரும். இத்தகு பாடல்கள் இந்நூலில் 1223 உள்ளன. (75) 5420. | ‘சேறி, ஐய! விரைந்தனை; தீயவை எல்லாம் வேறி; யான் இனிஒன்றும் விளம்பலென்; மேலோய் ! கூறுகின்றன, முன்குறி உற்றன, கோமாற்கு ஏறும்’ என்று,இவை சொல்லினள் இன்சொல் இசைப்பாள்; |
|