பக்கம் எண் :

476சுந்தர காண்டம்

அனுமன், மிகுதியையும்பெருமையையும் குறிக்க. அரக்கர் கூட்டம் கடல்
எனப்பட்டது. அரக்கர் கூட்டத்தைக் கடல் என்றதற்கு ஏற்பக் கலக்கி என்ற
சொல் பொருத்தமாக வந்தது. மண்டோதரி மந்த உதரத்தவள். சுருங்கிப் படிந்த
வயிற்றினள் என்று பொருள்.                                  (4)

5433.

‘மீட்டும் இனி, எண்ணும் வினை வேறும் உளது
                                  அன்றால்;
ஓட்டி இவ்அரக்கரை உலைத்து, உரிமை எல்லாம்
காட்டும் இதுவேகருமம்; அன்னவர் கடும் போர்
மூட்டும் வகையாவதுகொல் ?’ என்று முயல்கின்றான்.

     இவ் அரக்கரைஉலைத்து ஒட்டி -இந்த அரக்கர்களை எல்லாம்
வருத்தி ஓடச் செய்து; உரிமை எல்லாம் - நான், இராமபிரானுக்கு
அடியனாகும் உரிமைத் தன்மை எல்லாம்; காட்டும் இதுவே கருமம் -
வெளிப்படையாகக் காட்டுகின்ற இதுவே நான் செய்யத் தக்க செயல்; இனி,
மீட்டும் எண்ணும் வினை -
இனிமேல், மறுபடியும் ஆலோசிக்க வேண்டிய
காரியம்; வேறும் உளது அன்று - வேறு ஒன்றும் இல்லை; அன்னவர் -
அந்த அரக்கரை; கடும் போர் மூட்டும் வகை - கொடிய போரில்மூளச்
செய்யும் விதம்; யாவது கொல் என்று முயல்கின்றான் - எதுவாகும் என்று
நினைத்து (அதற்குரிய உபாயத்தை) ஆலோசிப்பவனாயினான் அனுமன்.

     அரக்கரைப்போர் மூட்டி அழிப்பதே தான் செய்யத்தக்க செயல்
என்றும், அதுவே அடியவனாகக் காட்டுதற்குரியதென்றும் அனுமன்
எண்ணுகின்றான். ஆல். கொல்; அசை.                           (5)

5434.

‘இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால்,
அப் பெரிய பூசல்செவி சார்தலும், அரக்கர்
வெப்புறுசினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால்,
துப்பு உறமுருக்கி, உயிர் உண்பல், இது சூதால்.

     இப்பொழிலினைக்கடிது இறுக்குவென் - இந்தச் சோலையை
விரைவில் முறித்து அழிப்பேன்; இறுத்தால் - அவ்வாறு யான் அழித்தால்;
அப்பெரிய பூசல் செவி சார்தலும் -
அந்தப் பெரிய ஆரவாரம் தமது
காதில்பட்டவுடன்; அரக்கர் வெப்பு உறு சினத்தர் - அரக்கர்கள்
கொடுமைமிக்ககோபத்தினராகி; எதிர் மேல் வருவர் - என்மேல் எதிர்த்துப்
போர் புரியவருவார்கள்; வந்தால் -