போயின; எரிந்தன- நெருப்புப் பற்றி எரிந்து விட்டன; கரிந்த - கருகிப் போயின; ஒடிந்தன - ஒடிபட்டன; ஒசிந்தன - துவண்டு சாய்ந்தன; உதிர்ந்தன - வலியற்று உதிர்வன ஆயின; பிதிர்ந்த - சின்னபின்னப்பட்டன. மரங்களின்அழிவு, பல வினைச் சொற்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. (9) 5438. | வேரொடுமறிந்த சில; வெந்த சில; விண்ணில் காரொடு செறிந்தசில; காலினொடு வேலைத் தூரொடு பறிந்தசில; தும்பியொடு வானோர் ஊரொடு மலைந்தசில; உக்க, சில நெக்க; |
சில வேரொடுமறிந்த - சில மரங்கள் வேரொடுகீழே விழுந்தன; சிலவெந்த - சில மரங்கள் வெந்து போயின; சில விண்ணில் காரொடு செறிந்த- சில மரங்கள் ஆகாயத்தில் உள்ள மேகத்தோடு நெருங்கின; சில காலினொடு வேலை தூரொடு மறிந்த - சில மரங்கள் காற்றினால் கடலில் உள்ள சேற்றோடு குப்புற்று வீழ்ந்து அழிந்தன; சில தும்பியொடு வானோர் ஊரொடு - சில, வண்டுகளோடு தேவ நகரங்களில் சென்று; மலைந்த - மோதின; சில நெக்க உக்க - சில பிளந்து சிதறிச் சிந்தின. அசோக வனத்துமரங்கள், இடம் பெயர்ந்து சென்றமையைத் தெரிவிக்கின்றது இக்கவிதை. (10) 5439. | சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் போர் ஆனை நுகரக்குளகும் ஆன; அடி பற்றா மேல் நிமிரவிட்டன, விசும்பின் வழி மீப் போய், வானவர்கள்நந்தன வனத்தையும் மடித்த. |
சுழற்றிய -அனுமனால்சுழற்றி எறியப்பட்ட; சோனை முதல் மற்றவை- மேகத்தைத் தம்மிடம் கொண்ட மற்றும் சில மரங்கள்; திசைப் போர்ஆனை நுகரக் குளகும் ஆன - எட்டுத்திக்குகளையும் காக்கும் போரில்சிறந்த யானைகள் உண்ணும் தழை உணவு ஆயின; அடி பற்றாமேல் நிமிரவிட்டன - அடியைப் பற்றி வானத்தில் செல்லும் படி வீசி எறியப்பட்ட சிலமரங்கள்; விசும்பின் வழி மீப் போய் - ஆகாய வழியாக மேலே சென்று;வானவர்கள் நந்தனவனத்தையும் மடித்த - தேவர்களது அழகிய பூஞ்சோலையையும் அழித்தன. |