பக்கம் எண் :

480சுந்தர காண்டம்

    சோனை - மேகம்;நந்தன வனம் - (இங்கே) கற்பகப் பூஞ்சோலை. (11)

5440.

அலைந்தனகடல் திரை; அரக்கர் அகல் மாடம்
குலைந்து உகஇடிந்தன; குலக் கிரிகளோடு
மலைந்து பொடிஉற்றன; மயங்கி நெடு வானத்து
உலைந்து விழும்மீனினொடு வெண் மலர் உதிர்ந்த.

     கடல் திரைஅலைந்தன - (அனுமன் எறிந்தமரங்களினால்) கடலின்
அலைகள் அலைவனவாயின; அரக்கர் அகல் மாடம் - அரக்கருக்குரிய
பெரிய மாளிகைகள்; குலைந்து உக இழந்தன - நிலை கெட்டுச் சிதறிச்
சிந்தும்படி இடிந்து போயின; குலக் கிரிகளோடு மலைந்து பொடி உற்றடை
-
(அனுமன் எறிந்த சில மரங்கள்) ஏழுகுலப் பருவதங்களோடு மோதிப்
பொடியாய்ச் சிந்தின; வெண் மலர் - மரங்களில் உள்ள வெள்ளிய பூக்கள்;
நெடுவானத்து உலைந்து விழும் மீனினொடு - பெரிய ஆகாயத்தினின்றும்
நிலை கலங்கிக் கீழே விழக்கூடிய நட்சத்திரங்களோடு; மயங்கி உதிர்ந்த -
கலந்து கீழே சிந்தின.

     அனுமனால் வீசிஎறியப்பட்ட மரங்கள் ஆகாயத்தில் தாக்கின.
தாக்கப்பட்ட நட்சத்திரங்களோடு, மரங்களிலிருந்த வெண்ணிறப் பூக்கள்
வேற்றுமை தெரியாமல் மயங்கிக் கீழே உதிர்ந்தன. விண்மீனுக்கு வெள்ளை
மலர் ஒப்பு.                                               (12)

5441.

முடக்கு நெடுவேரொடு முகந்து உலகம் முற்றும்
கடக்கும்வகைவீசின, களித்த திசை யானை,
மடப் பிடியினுக்குஉதவ மையின் நிமிர் கை வைத்து
இடுக்கியனஒத்தன, எயிற்றின் இடை ஞால்வ.

     உலகம் முற்றும்கடக்கும் வகை - உலகம் முழுவதும் கடந்து
செல்லும்படி; முடக்கும் நெடு வேரொடு முகந்து வீசின - வளைந்துள்ள
நீண்ட வேருடனே பிடுங்கி அனுமனால் வீசி எறியப்பட்ட சில மரங்கள்;
களித்த திசையானை எயிற்றின் இடை ஞால்வ -
மத மேற் கொண்ட திக்கு
யானைகளின் தந்தங்களின் நடுவில் தொங்குவனவாகி; மடப் பிடியினுக்கு
உதவ -
இளமையுள்ள பெண் யானைகளுக்குக் கொடுக்க; மையின் நிமிர்
கைவைத்து இடுக்கியன ஒத்த -
மேகத்தைப் போல மேலே நிமிர்ந்து எழுந்த
தன் துதிக்கையில் வைத்து இடுக்கிக் கொண்டுள்ளனவற்றைப் போலத்
தோன்றின.