அனுமனால்வீசப்பட்ட மரங்கள் சில, யானையின் தந்தங்களில் தங்கின. அவை, அந்த யானை பிடிக்குக் கொடுக்க, கையினால் இடுக்கி எடுத்து வைத்தது போன்றிருந்தன. யானையின் எயிற்றிடை ஞால்வ; ஞால்வ, ஒத்தன. (13) 5442. | விஞ்சை உலகத்தினும், இயக்கர் மலைமேலும், துஞ்சுதல் இல்வானவர் துறக்க நகரத்தும், பஞ்சி அடிவஞ்சியர்கள் மொய்த்தனர், பறித்தார், நஞ்சம்அனையானுடைய சோலையின் நறும்பூ. |
நஞ்சம்அனையானுடைய சோலையின் நறும் பூ - விடம் போன்ற கொடிய இராவணனது அசோகவனத்து நறுமணம் மிக்க மலர்களை; விஞ்சை உலகத்தினும் இயக்கர் மலை மேலும் - வித்தியாதரர் உலகத்திலும் யட்சர்கள் வாழும் மலைகளின் மீதும்; துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும் - இறத்தல் என்பது இல்லாத தேவர்கள் வாழ்கின்ற சுவர்க்க நகரத்திலும்; பஞ்சி அடி வஞ்சியர்கள் - (வாழ்பவர்களான) செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய பாதங்களை உடைய மகளிர்; மொய்த்தனர் பறித்தார் - கூட்டமாய் நெருங்கி வந்து பறித்துக் கொண்டார்கள். இராவணனதுபூந்தோட்டத்து மலர்களை விஞ்சை மகளிர் முதலியோர் பறித்துக் கொள்ளும் வகையில், அனுமன் எப்புறத்தும் மரங்களை வீசி எறிந்தனன் என்பது இதன் கருத்து. (14) 5443. | பொன் திணி மணிப் பரு மரன், திசைகள் போவ, மின் திரிவஒத்தன; வெயில் கதிரும் ஒத்த; ஒன்றினொடும்ஒன்று இடை புடைத்து உதிர, ஊழின் தன் திரள்ஒழுக்கி, விழு தாரகையும் ஒத்த. |
திசைகள் போவ -நான்குதிசைகளிலும் செல்லும்; பொன் திணி மரன்- பொன்னால் பதிக்கப்பெற்ற மரங்கள்; மின் திரிவ ஒத்தன - மின்னல்கள்திரிவனவற்றை ஒத்தன; மணிப் பருமரன் - இரத்தினங்களால் பதிக்கப் பெற்றமரங்கள்; வெயில் கதிரும் ஒத்த - சூரியனுடைய ஒளியையும் ஒத்திருந்தன;ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர - (அவ்வாறு வீசி எறியப்பட்டமரங்கள்) இடையே ஒன்றோடு ஒன்று தாக்கப்பட்டுத் தகர்ந்து தூளாகிக் கீழேஉதிரும்படி; ஊழின் - கற்பமுடிவில்; தன் திரள் ஒழுக்கின் விழும்தாரகையும் ஒத்த - கூட்டமாக விழும் நட்சத்திரங்கள் போலவும் விளங்கின. |