பக்கம் எண் :

484சுந்தர காண்டம்

5448.

எண் இல்தரு கோடிகள் எறிந்தன செறிந்தே,
தண்ணென்மழைபோல் இடை தழைந்தது;
சலத்தால்,
அண்ணல் அனுமான்,‘அடல் இராவணனது, அந்
                                      நாள்,
விண்ணினும் ஓர்சோலை உளது ஆம்’ என,
                                  விதித்தான்.

     அந் நாள்எறிந்தன - அந்த காலத்தில்,(தான்) பிடுங்கி
எறிந்தனவான;எண் இல் தரு கோடிகள் செறிந்து - அளவிறந்த
மரங்களின் கூட்டங்கள்நெருங்கி; தண்ணென் மழை போல் - குளிர்ந்த
மேகம் போல; இடைதழைந்தது - விண்ணிடத்தில் தழைந்து தோன்றியது;
(அதனால்) அண்ணல்அனுமான் - பெருமை பொருந்திய அனுமான்;
சலத்தால் -
கோபத்தால்;அடல் இராவணனது - வலிமை மிக்க
இராவணனுடைய; ஓர் சோலை -அசோகவனச் சோலை; விண்ணினும்
உளது ஆம் என விதித்தான் -
வானத்தும் உள்ளது என்று சொல்லும் படிச்
செய்தான்.

     கோடி - கூட்டம்:‘சீவகோடிகள்’ என்பது போல. இராவணனுக்கு
வானத்திலும் ஒரு சோலை இருக்கிறது என எண்ணும்படியாக அசோகவனத்து
மரங்களை அனுமன் விண்ணிலே சிதறி எறிந்தான் என்பது கருத்து.     (20)

5449.

தேன் உறைதுளிப்ப, நிறை புள் பல சிலம்ப,
பூ நிறை மணித்தரு விசும்பிடை போவ,
மீன் முறைநெருக்க, ஒளி வாளொடு வில் வீச,
வானிடை நடாயநெடு மானம் எனல் ஆன.

     தேன் உறைதுளிப்ப - தேன் துளிகள்சிந்தவும்; நிறை புள்பல
சிலம்ப -
அங்கு நிறைந்து வாழ்ந்து வந்த பறவைகள் ஒலிக்கவும்; பூ நிறை
மணித் தரு -
மலர்கள் நிறைந்த இரத்தினமயமான மரங்கள்; விசும்பின்
இடை போவ -
ஆகாயத்தினிடத்தே போவனவாய்; மீன் முறை நெருக்க -
(அவ் விண்ணில் உள்ள) நட்சத்திரங்கள் முறையே  நெருக்கவும்; ஒளி
வாளொடு வில் வீச -
ஒளியானது வாளொடு போட்டியிட்டு ஒளி வீசவும்;
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆய -
ஆகாயத்தில் செல்லும்
பெரிய விமானம் என்று சொல்லத்தக்கனவாயின.