அனுமன் வீசிஎறிந்த மரங்களில் உள்ள பூக்களும், அவற்றில் உள்ள மணிகளும் வீசும் ஒளி வாள் போல, விளங்கின. மானம் - விமானம்; முதற் குறை. (21) | 5450. | சாகம் நெடுமாப் பணை தழைத்தன; தனிப் போர் நாகம் அனையான்எறிய, மேல் நிமிர்வ-நாளும் மாக நெடு வானிடைஇழிந்து, புனல் வாரும் மேகம் எனல்ஆய-நெடு மா கடலின் வீழ்வ. |
தனிப் போர்நாகம் அனையான் எறிய - ஒப்பற்ற போரில்சிறந்த யானை போன்ற வலிமை பெற்ற அனுமன் வீசி எறிந்ததனால்; நெடு மாப் பணை சாகம் தழைத்தன - நீண்ட பெரிய கிளைகளும் இலைகளும் தழைத்தனவும்; மேல் நிமிர்வ - மேலே எழுந்து விளங்குவனவும்; நெடு மாகடலின் வீழ்வ - பிறகு நெடிய பெரிய கடலில் வீழ்வனவுமாகிய மரங்கள்; நாளும் - எல்லாக் காலத்தும்; நெடு மாக வான் இடை கிழிந்து - மிகப் பெரிய ஆகாயத்திலிருந்து கீழே இறங்கி; புனல் வாரும் மேகம் எனல் ஆய - கடல் நீரை முகப்பனவான மேகம் என்று சொல்லத்தக்கன வாயின. மாகம் - வானம்;மாக வான் - ஒரு பொருட் பன்மொழி. (22) கலிவிருத்தம் (வேறு வகை) | 5451. | ஊனம்உற்றிட, மண்ணின் உதித்தவர், ஞானம் முற்றுபுநண்ணினர் வீடு என, தான கற்பகத்தண்டலை விண்தலம் போன, புக்கன,முன் உறை பொன்னகர். |
ஊனம் உற்றிட -குற்றம்நேர்ந்திட்டதனால்; மண்ணில் உதித்தவர் - இந்த மண்ணுலகத்தில் பிறந்த தேவர்கள்; ஞானம் முற்றுபு - பிறகு ஞானம் முழுமையாக நிரம்பியவுடன்; வீடு நண்ணினர் என - துறக்கத்தை அடைந்தவர்களைப் போல; தான கற்பகத் தண்டலை - கொடைக்குணம் பெற்ற கற்பக மரங்கள் அடர்ந்த அந்த அசோகவனச் சோலை; விண்தலம் போன - அனுமனால் வீசி எறியப்பட்டு வான் வழியாகச் சென்று; முன் |