உறை பொன் நகர்புக்கன - முன்னே தங்கியிருந்த சுவர்க்க லோகம் போய்ச் சேர்ந்தன போல் தோற்றம் அளித்தன. அசோகவனத்துக்கற்பக மரங்கள், துறக்கத்திலிருந்து இராவணனால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டவைகள். அவைகள் அனுமனால் வீசி எறியப்பெற்று, முன் இருந்த இடத்தை அடைந்து விட்டன. விண்ணுலகத் தேவர் குற்றம் செய்து மண்ணுலகில் பிறந்து, ஞானம் முற்றி மீண்டும் விண்ணுலகம் அடைந்ததுபோல அனுமன் எறிந்த அசோக வனத்து மரங்கள் ஆகாயத்தை அடைந்தனவாம். கவந்தன், விராதன், வீடுமன் முதலியோர் சாபக் கேட்டால் தம் தேவபதம் நீங்கியார் மண்ணுலகில் பிறந்து ஞானம் முற்றிய பின் தம் முன்னைய உயர் நிலையைப் பெற்ற புராணச் செய்தி இங்கு நினைக்கத்தகும். (23) | 5452. | மணி கொள்குட்டிமம் மட்டித்து, மண்டபம் துணி படுத்து,அயல் வாவிகள் தூர்த்து, ஒளிர் திணி சுவர்த்தலம் சிந்தி, செயற்கு அரும் பணி படுத்து,உயர் குன்றம் படுத்துஅரோ; |
மணிகொள்குட்டிமம் மட்டித்து - இரத்தினங்கள்பதிக்கப் பெற்ற திண்ணைகளைத் தகர்த்து; மண்டபம் துணிபடுத்து - மண்டபங்களைத் துண் டுதுண்டுகளாக உடைத்து; அயல் வாவிகள் தூர்த்து - பக்கத்தில் உள்ளதடாகங்களைத் தூர்த்து; ஒளிர் திணி சுவர்த்தலம் சிந்தி - ஒளி விளங்குகின்ற வலிய சுவர்களின் இடங்களை இடித்துத்தள்ளி; செயற்கு அரும் பணி படுத்து - செய்வதற்கு அரிய வேலைப்பாடு அமைந்த பொருள்களை எல்லாம் அழித்து; உயர் குன்றம் படுத்து - உயர்ந்த குன்றுகளையும் அழித்து. இதுவும் அடுத்தசெய்யுளும் குளகம். குட்டிமம் - கல்லால் அமைந்த மேடை; குன்றம் - செய்குன்று; சோலையில் செயற்கை அழகில் அமைந்த கட்டிடங்கள் முதலியன அழிக்கப்பட்டன என்பதாம். (24) | 5453. | வேங்கைசெற்று, மராமரம் வேர் பறித்து, ஓங்கு கற்பகம்பூவொடு ஒடித்து உராய், பாங்கர்சண்பகப் பத்தி பறித்து, அயல் மாங்கனிப் பணைமட்டித்து மாற்றியே; |
|