காமரம் களிவண்டு கலங்கிட - காமரம் என்னும்பண்ணைப் பாடும் களிப்புள்ள வண்டுகள் கலக்கம் அடைய; மா மரங்கள் மண்ணொடு மடிந்தன - பெரிய மரங்கள் தரையோடு மடிந்து கீழே விழுந்தன; அரங்குதாம் - நாடக சாலைகள்; அரங்க(த்)தகர்ந்து உரி - அழியுமாறு முறிந்து கீழே விழ; பூமரங்கள் எரிந்து பொரிந்த - மலர்களை உடைய பலமரங்கள் எரிந்து பொரிந்து சாம்பலாய்ப் போயின. அரங்கல் -அழிதல்; அரங்கு - மேடை. (27) | 5456. | குழையும்,கொம்பும், கொடியும், குயிற்குலம் விழையும் தண்தளிர்ச் சூழலும், மென் மலர்ப் புழையும், வாசப்பொதும்பும், பொலன் கொள் தேன் மழையும்,வண்டும், மயிலும், மடிந்தவே. |
குழையும்கொம்பும் - வளையும் தன்மையுள்ளசிறு கிளைகளும்; கொடியும் - மலர்க்கொடிகளும்; குயில் குலம் விழையும் தண் தளிர்ச் சூழலும் - குயில்களின் கூட்டம் விரும்பக் கூடிய குளிர்ந்த தளிர்கள் அடர்ந்த இடங்களும்; மென் மலர்ப் புழையும் - மென்மையான மலர்களைக் கொண்ட நுழைவாயிலும்; வாசப் பொதும்பும் - மணமிக்க புதர்களும்; பொலன் கொள்தேன் மழையும் - பொன்னிறம் கொண்ட தேன் மழையும்; வண்டும், மயிலும் மடிந்த - வண்டுகளும், மயில்களும் அழிந்து போயின. மென் மலர்ப்புழையும் - மெல்லிய பூவின் துளையும் என்பது ஒரு பழைய உரை. (28) | 5457. | பவள மாக்கொடி வீசின, பல் மழை துவளும் மின் என,சுற்றிட; சூழ் வரை, திவளும் பொன்பணை மா மரம் சேர்ந்தன, கவள யானையின்ஓடையின் காந்தவே. |
வீசின பவளமாக்கொடி - அனுமனால் வீசி எறியப்பட்ட பவளம் போன்று சிவந்த கொடிகள்; பல் மழை துவளும் மின் என - பல மேகங்களில் துவண்டு தோன்றும் மின்னல்கள் போல; சூழ் வரை சுற்றிட - இலங்கையைச் சூழ்ந்திருந்த மலைகளில் சுற்றிக் கொள்ள; சேர்ந்தன திவளும் பொன் பணை மாமரம் - எறியப்பட்டு மலைகளைச் சேர்ந்தனவான, விளங்குகின்ற பொன் மயமான கிளைகளை உடைய பெரிய மரங்கள்; கவள யானையின் ஓடையின் |