அனுமன் வீசிஎறிந்த மரங்களால் தாமரைத்தடாகம் சந்தனக் குழம்பாயிற்று; உவர்க்கடல் மலர்க்கடலாயிற்று. கா - சோலை; காமரம் - ஒரு வகைப் பண். (33) | 5462. | சிந்துவாரம் திசைதொறும் சென்றன, சிந்து வார் அம்புரை திரை சேர்ந்தன; தந்து, ஆரம்,புதவொடு தாள் அற, தம் துவாரம்துகள் பட, சாய்ந்தவே. |
சிந்து வாரம்திசை தொறும் சென்றன - (அனுமன் வீசிஎறிந்ததனால்) கரு நொச்சிமரங்கள் நான்கு திக்குகளிலும் சென்றனவாய்; சிந்து வார்அம்புரை - கடலின் நீண்ட அழகிய உயர்ந்த; திரை சேர்ந்தன - அலைகளில் சேர்ந்தன; ஆரம் - (அன்றியும்) சந்தன மரங்கள்; தம் துவாரம் புதவொடு தாள் அற தந்து - தமது வாயில்களின் கதவும் தாழ்ப்பாள்களும் முறிந்து போம்படி (மாளிகைகள் மேல்) வீசி எறியப்பட்டு; துகள் படச் சாய்ந்தன - (அவைகள்) தூளாகும்படிச் சாய்ந்து விழுந்தன. சிந்து வாரம் -கரு நொச்சி; சிந்து - கடல்; ஆரம் - சந்தன மரம்; புதவு - கழிவு; தந்து - எறியப்பட்டு. (34) | 5463. | நந்தவானத்து நாள் மலர் நாறின, நந்த, வானத்துநாள் மலர் நாறின; சிந்து அவ்வானம் திரிந்து உக, செம் மணி சிந்த, வால்நந்து இரிந்த, திரைக் கடல். |
நந்த வானத்துநாறின நாள்மலர் - அசோகவனம் என்னும் பூஞ்சோலையில் மணம் வீசிய அன்று அலர்ந்த மலர்கள்; வானத்து நந்த மலர் நாள் நாறின - ஆகாயத்தில் மிகுதியாக விளங்குகின்ற நட்சத்திரங்கள் போல விளங்கின; சிந்து திரிந்து அவ் வானம் உக - புளிய மரங்கள் (ஆகாயத்தில்) சுழன்று, (சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட) அந்தக் கடலிலே விழ; வால் நந்து - வெண்மையான சங்குப் பூச்சிகள்; திரை கடல் - அலைகளை உடைய கடலில்; செம்மணி சிந்த இரிந்த - (தமது கர்ப்பத்தில் உள்ள) அழகிய முத்துக்கள் சிந்தும் படி நிலை கெட்டு ஓடின. நந்த வானம் எனஇடையில் எழுத்து நீண்டது. காண்டா வனம். ஆச்சிராமம் என்பன போல. நாறுதல் - மணத்தல் -(1) விளங்குதல் (2) சிந்து - புளியமரம்; வானம் - பறித்த குழி. (35) |