பக்கம் எண் :

பொழில் இறுத்த படலம்493

வெயில்கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன,
புயல் கடல்தலைபுக்கன போல்வன.

வாரி நேர்இயக்கு உற - கடலுக்கு நேராகச்சென்று விழும்படி;
திசைதொறும் எறிந்தன - எல்லாத்திக்குகளிலும் எறியப்பட்டனவாகிய;
மயக்கு இல்பொன் குல வல்லிகள் - ஒளி மழுங்குதல் இல்லாத பொன்
மயமானகூட்டமாக உள்ள கொடிகள்; வெயில் கதிர்க் கற்றை அற்று உற
வீழ்ந்தன -
சூரிய கிரணங்களின் தொகுதி அறுபட்டு (பூமியில்) பொருந்தி
வீழ்ந்தனவாகி;புயல் கடல் தலை பூக்கன போல்வன - மேகங்கள் படிகின்ற
கடலினிடத்துப்புகுந்தனவற்றை ஒப்பனவாயின.

அனுமன் வீசிஎறிந்ததால் கடலில் விழுந்த பொற்கொடிகளின் தொகுதி,
அறுபட்டு, கடலில் புக்க சூரிய கிரணக் கற்றை போல விளங்கின. தன்மைத்
தற்குறிப்பேற்ற அணி. (38)

5467.

பெரிய மாமரமும், பெருங் குன்றமும்,
விரிய வீசலின்,மின் நெடும் பொன் மதில்
நெரிய, மாடம்நெருப்பு எழ, நீறு எழ,
இரியல்போன,இலங்கையும் எங்கணும்.

பெரிய மா மரமும்- மிகப்பெரிய மரங்களையும்; பெரும் குன்றமும்
-
பெரிய மலைகளையும்; விரிய வீசலின் - பிளவுபடும்படி (அனுமன்) வீசி
எறிந்ததனால்; மின் நெடும் பொன் மதில் நெரிய - பேரொளி கொண்ட
நீண்ட பொன் மதில்கள் நெரிந்து தூளாகவும்; மாடம் நெருப்பு எழ நீறு எழ
-
மாளிகைகள் நெருப்புத் தோன்றிச் சாம்பலாகப் போகவும்; இலங்கையும்
எங்கணும் இரியல் போன -
இலங்கை அரக்கர் கூட்டங்கள் நிலை கெட்டு
எல்லா இடங்களிலும் ஓடின.

இலங்கைஆகுபெயரால் இலங்கையில் வாழ்ந்த அரக்கர் கூட்டங்களைக்
குறித்தது. (39)

சந்திரன் மறைதல்

                                                                       அறுசீர்ஆசிரிய விருத்தம்

5468.

‘ “தொண்டை அம் கனி வாய்ச் சீதை துயக்கினால்
என்னைச் சுட்டாய்;
விண்ட வானவர்கண் முன்னே விரி பொழில்
இறுத்து வீசக்