பக்கம் எண் :

494சுந்தர காண்டம்

 

கண்டனைநின்றாய்” என்று, காணுமேல், அரக்கன்
                                   காய்தல்
உண்டு’ எனவெருவினான்போல், ஒளித்தனன்,
                           உடுவின் கோமான்.

     தொண்டை அம்கனி வாய்ச் சீதை துயக்கினால் - கொவ்வைக்
கனிபோன்ற அழகிய வாயையுடைய சீதையிடம் கொண்ட தொடர்பால்
(நிமித்தமாக); என்னைச் சுட்டாய் - என்னை நெருப்பு போல் சுட்டு
வருத்தினாய்; விண்ட வானவர் கண் முன்னே - என்னிடத்துப் பகைமை
கொண்ட தேவர்களின் கண்ணுக்கு எதிரில்; விரி பொழில் இறுத்து வீசக்
கண்டனை நின்றாய் -
பரந்த சோலையை (ஒரு குரங்கு) முறித்து அழிக்கவும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாய்; என்று - என்று  நினைத்து; அரக்கன்
காணு மேல் காய்தல் உண்டு என -
அரக்கனாகிய இராவணன்
காண்பானேல் தன்னை வருத்துதல் செய்யக்கூடும் என்று கருதி; வெரு
வினான் போல் -
அஞ்சினவனைப் போல; உடுவின் கோமான் ஒளித்
தனன்-
நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரன் மறைந்தான்.

     சந்திரன்இராவணனுக்கு அஞ்சி மறைந்ததாகக் கூறியது ஏதுத்
தற்குறிப்பேற்ற அணி. நட்சத்திரங்களுக்கு நாயகன் என்று திங்களைக் குறிப்பது
புராணக் கற்பனை. காதல் வேதனையுறும்போது சந்திரன் சுடுவான் என்பது
கவிமரபு. துயக்கு - தொடர்பு; (சம்பந்தம்) திருமகள் அம்சமான சீதைக்கும்
சந்திரனுக்கும் அமுதத்துடன் தோன்றியதனால் உடன் பிறப்புச் சம்பந்தம். (40)

அனுமன் செயலால்உலகெங்கும் ஒளி வீசல் 

5469.

காசு அறுமணியும், பொன்னும், காந்தமும்,
                         கஞல்வது ஆய
மாசு அறு மரங்கள்ஆகக் குயிற்றிய மதனச்
                          சோலை,
ஆசைகள்தோறும்,ஐயன் கைகளால் அள்ளி அள்ளி
வீசிய,விளக்கலாலே, விளங்கின உலகம் எல்லாம்.

     காசு அறு மணியும்பொன்னும் - குற்றம் இல்லாதஇரத்தினங்களும்
தங்கமும்; காந்தமும் கஞல்வது ஆய - சூரிய காந்தம், சந்திர காந்தம்
என்னும் கற்களும் (ஆகிய இவற்றால்)