பக்கம் எண் :

பொழில் இறுத்த படலம்495

விளங்குவதான; மாசுஅறு மரங்கள் ஆகக் - குற்றமற்ற மரங்களாக;
குயிற்றிய - இழைத்து அமைத்த; மதனச் சோலை - மன்மதனுக்கு
இருப்பிடமான அசோகவனச் சோலை மரங்கள்; ஆசைகள் தோறும் ஐயன்
கைகளால் அள்ளி அள்ளி வீசிய விளக்கலாலே -
எல்லாத் திக்குகளிலும்
அனுமன் தன் இருகைகளாலும் வாரி வாரி வீசப்பட்டன வாய் ஒரு பெரிய
ஒளியைச் செய்தமையால்; உலகம் எல்லாம் விளங்கின - உலகம் முழுவதும்
அந்த இருளில் நன்கு விளங்கின.

     சந்திரன்மறைந்த பிறகு, ஏற்பட்ட இருள், வீசப்பட்ட மணி ஒளி மிக்க
மரங்களின் ஒளியால் அகன்றது. உலகு ஒளியுடன் விளங்கியது. ஆசை -
திசை; காம உணர்வு தோன்றுதற்கு ஏற்ப இராவணனால் அமைக்கப்பட்டது
ஆதலின் மதனச் சோலையாயிற்று.                              (41)

விலங்கு மற்றும்பறவைகளின் நிலை 

5470.

கதறினவெருவி, உள்ளம் கலங்கின, விலங்கு;
                                 கண்கள்
குதறின பறவை,வேலை குளித்தன; குளித்திலாத
பதறின; பதைத்த;வானில் பறந்தன; பறந்து பார்
                                வீழ்ந்து
உதறின, சிறையை;மீள ஒடுக்கின உலந்து போன.

     விலங்கு வெருவிக்கதறின - அசோகவனத்திலிருந்த மிருக இனங்கள்
அச்சத்தால் வீறிட்டுக் கத்தின; உள்ளம் கலங்கின - மனக்கலக்கம்
அடைந்தன; கண்கள் குதறின - கண்கள் புண்ணாகிப் பொங்கின; பறவை
வேலை குளித்தன -
அங்கிருந்த பறவை இனங்கள் கடலில் வீழ்ந்து
ஆழ்ந்தன; குளித் திலாத பதறின - அவ்வாறு வீழாத பறவைகள்; பதைத்த
வானில் பறந்தன -
மிகவும் துடித்து, பதறினவாய்; பறந்து பார் வீழ்ந்து
சிறையை உதறின -
சிறிது தூரம் பறந்து (மேலே பறக்கமுடியாமல்) பூமியில்
விழுந்து சிறகுகளை உதறிக் கொண்டன; நீள ஒடுக்கின உலந்து போன -
ஒடுக்கிக் கொண்டனவாய் அழிந்து போயின.

     அனுமன்அசோகவனத்தை அழித்ததால் அங்கிருந்த மிருகங்களும்
பறவைகளும் அச்சத்தால் அடைந்த செயல்கள் கூறப்பெற்றன. பறவைகள்
சிறகுகளை உதறுவது இறக்குமுன் நிகழ்ந்த சாவுக்கு அறிகுறியாகும். இப்பாடற்
செய்திகளை அனுமன் மயேந்திர மலையில்