பக்கம் எண் :

498சுந்தர காண்டம்

கூந்தலை உடைய சீதாதேவிக்கு; ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி -
தலையில் அணிதற்கு உரிய மற்றொரு சூடாமணியை ஆராய்ந்து எடுத்து;
எறிகடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் -
அலை எறியும்
கடல் கொண்டு வந்து கொடுப்பது போல சூரியன் தோன்றினான்.

     குடைக்காசுக்கரசு,சிகாமணி என்பன ஒரே பொருளன. இது தன்மைத்
தற்குறிப்பேற்ற அணி. சூரிய குலத்து அரசன் ஒருவனுக்கு வருணனால்
பரிசாகக் கொடுக்கப்பட்டது என்றும் அதனைத் தயரதன் மருமகள் சீதைக்கு
வழங்கினான் என்றும் கூறுவர். மாமனார் அளித்த சிறப்புடையது ஆதலின்,
பிற அணிகளை எறிந்ததுபோல் இதனை எறியாமல் பாதுகாத்தாள்..     (45)

அசோகவனத்தைஅழித்து நின்ற அனுமன் நிலை 

5474.

தாழ் இரும்பொழில்கள் எல்லாம் துடைத்து, ஒரு
                             தமியன் நின்றான்,
ஏழினொடு ஏழுநாடும் அளந்தவன் எனலும்
                             ஆனான்;
ஆழியின் நடுவண்நின்ற அரு வரைக்கு அரசும்
                             ஒத்தான்;
ஊழியின் இறுதிக்காலத்து உருத்திரமூர்த்தி
                            ஒத்தான்.

     தாழ் இரும்பொழில்கள் எல்லாம் துடைத்து - தழைத்த பெரும்
சோலை முழுவதையும் அழித்து; ஒரு தமியன் நின்றான் - தன்னந்தனியனாய்
நின்ற அனுமன்; எழினோடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் -
பதினான்கு உலகங்களையும் (தனது இரண்டு திருவடிகளாலும்) அளந்து
கொண்ட திருவிக்கிரம மூர்த்தி என்று சொல்லத்தக்கவனாகவும் இருந்தான்;
ஆழியின் நடுவண் நின்ற அருவரைக்கு அரசும் ஒத்தான் -
(அதுவன்றிப்)
பாற்கடலின் நடுவே (மத்தாக) நின்ற அரிய சிறந்த மலையாகிய மந்தர
மலையைப் போலவும் இருந்தான்; (மேலும்); ஊழியின் இறுதிக் காலத்து
உருத்திர மூர்த்தி ஒத்தான் -
 கற்பாந்த காலத்தில் உலகத்தை எல்லாம்
அழித்திட்டு நிற்கும் உருத்திர மூர்த்தியைப் போலவும் இருந்தான்.

     பெரிய வடிவாலும்அரக்கக் கடலைக் கடையவுள்ளமையாலும் முற்றும்
அழித்தமையாலும் திருவிக்கிரமாவதாரம், மந்தரமலை, ஆகியவை
உவமையாயின.
                                            (46)