பக்கம் எண் :

500சுந்தர காண்டம்

 

ஆய மான் எய்த,அம் மான், இளையவன், “அரக்கர்
                                      செய்த
மாயம்” என்றுஉரைக்கவேயும், மெய்என மையல்
                                  கொண்டேன்,’

     தீயவர் தீயசெய்தல் - கொடியோர் செய்யும் தீய செயல்களை;
தீயவர்தெரியின் அல்லால் - அவர் போன்ற கொடியரே தெரிந்து
கொள்வரே தவிர;தூயவர் துணிதல் உண்டே -  (என்னைப் போன்ற)
நல்லவர்கள் அறிவர்என்று நிச்சயிக்க முடியுமா ? (முடியாது); எல்லாம்
நும்முடைச் சூழல் -
இவை எல்லாம் அரக்கர்களாகிய உங்களுடைய
சூழ்ச்சியாகும்; ஆய மான்எய்த - (ஏனென்றால்) முன்பு காட்டில் மான்
உருவில் வந்த மாரீசன் என்பக்கத்தில் வர; அம்மான் அரக்கர் செய்த
மாயம் என்று இளையவன்உரைக்க வேயும் -
அந்த மான், அரக்கர்
செய்த மாயச் செயலால் வந்ததுஎன்று இலக்குவன் எடுத்துச் சொல்லிய
போதும்; மெய் என மையல்கொண்டேன் - (அதனை) மெய்யான மான்
என்றே (அறிவு மயக்கத்தால்)எண்ணி, அதன்மீது விருப்பம் கொண்டேன்.

     ‘மையல்கொண்டேன்’ - என்றது அதனால் யான் இங்கு வந்து
இத்துயரடையக் காரணமாயிற்று என்பதைக் குறிப்பிட்டபடி பிராட்டி தான்
அறியாதவளாகவே உரைக்கின்றாள். சூழல் - சூழ்ச்சி, ‘தொன்மை மயக்கிய
தோற்றிய சூழல்கள் சிந்தித்தே’ (திருவாய் மொழி 7.5.4) என மயக்கத்தின்
இயல்பை நம்மாழ்வார் விளக்கியது காண்க.                      (48)

அனுமன் ஓமமண்டபத்தைச் சிதைத்தல் 

5477.

என்றனள்;அரக்கிமார்கள் வயிறு அலைத்து,
                               இரியல்போகி,
குன்றமும்,உலகும், வானும், கடல்களும், குலைய
                                ஓட,
நின்றது ஓர்சயித்தம் கண்டான்; ‘நீக்குவல் இதனை’
                                என்னா,
தன் தடக் கைகள்நீட்டிப் பற்றினன், தாதை ஒப்பான்.

     என்றனள் -என்று,பிராட்டி அரக்கியர்களுக்கு மறுமொழி கூறினாள்;
அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல் போகி - அக்காவல் அரக்கியர்
வயிற்றில் அடித்துக் கொண்டு நிலை தடுமாறிச் சென்று; குன்றமும், உலகும்,
வானும் கடல்களும் குலைய