503 தூண் எலாம்சுடரும் காசு - (அந்தச்சயித்தத்தில் உள்ள) தூண்கள் யாவும் ஒளி விடும் மணிகளால் ஆனவை; சுற்று எலாம் முத்தம் சொன்னம் - அதன் சுற்றுப்பக்கமெல்லாம் (பிரகாரம்) முத்துக்களாலும் பொன்னாலும் இயன்றவை; பிடர் எலாம், பேணல் ஆம் மணியின் பத்தி - அதன் பின் பக்கமெல்லாம் விரும்பத்தக்க இரத்தினங்களின் வரிசையால் இயன்றவை; ஒளிகள் விம்ம - ஒளிகள் மிகுதலால்; சேண் எலாம் விரியும் கற்றை சேயொளிச் செல்வதற்கு ஏயும் - ஆகாயம் முழுவதும் பரவுகின்ற தொகுதியான சிவந்த ஒளியையே செல்வமாகக் கொண்ட சூரியனுக்கும் கூட; பூணல் ஆம் - ஆபரணமாக அணிவதற்கு உரியதாம் (ஆதலின்); எம் மனோரால் புகழல் ஆம் பொதுமைத்து அன்று - எம்மைப் போன்றவர்களால், புகழ்ந்து சொல்வதற்குரிய பொதுவான காரியம் அன்று. சொன்னம் -சொர்ணம்; தங்கம். (52) அனுமன்சயித்தத்தைப் பெயர்த்து இலங்கைமேல் வீசுதல் 5481. | ‘வெள்ளியங்கிரியை, பண்டு, வெந் தொழில் அரக்கன், வேரோடு அள்ளினன்’என்னக் கேட்டான்;அத் தொழிற்கு இழிவு தோன்ற, புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல, வள் உகிர்த்தடக் கைதன்னால் மண்நின்றும் வாங்கி, அண்ணல், |
அண்ணல் -பெரியோனான அனுமன்; வெம் தொழில் அரக்கன் - கொடிய தொழிலை மேற் கொண்ட அரக்கனாகிய இராவணன்; பண்டு, வெள்ளி அம் கிரியை வேரோடு அள்ளினன் என்ன கேட்டான் - முற்காலத்தில், வெள்ளி மலையாகிய அழகிய கைலாசத்தை வேரோடு பறித் தெடுத்தான் என்று, (உலகோர் சொல்லக்) கேட்டவனாய்; அத் தொழிற்கு இழிவு தோன்ற - அந்தச் செயலுக்குக் குறைவு உண்டாகுமாறு; புள்ளி மாமேரு என்னும் பொன் மலை எடுப்பான் போல - பல நிறம் கொண்ட பெரிய மேரு எனப்படும் பொன் மலையை எடுப்பவன் போல; வள் உகிர் தடக்கை தன்னால் - கூர்மையான நகங்களை உடைய தனது |