பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்515

     மடிக்கும் வாயர்- (கோபத்தால்) மடிக்கின்ற உதட்டை
உடையவர்களாகிய அந்த அரக்கர்கள்; வெய்து உறு படையின் மின்னர் -
கொடுமை மிகுந்த ஆயுதங்களான மின்னலை உடையவர்களாய்; வில்லினர்,
வீசு காலர் -
விற்களை உடையவர்களாய், வீசுகின்ற மூச்சுக் காற்றை
உடையவர்களாய்; மை உறு விசும்பின் தோன்றும் மேனியர் - மேகம்
பொருந்திய வானம் போன்ற கரிய உடம்பை உடையவர்களாய்; கைபரந்து,
உலகு பொங்கி கடையுகம் முடியும் காலை -
பக்கங்களில் பரவி, உலகின்
மீது (கடல்கள்) பெருக்கெடுத்து யுகங்கள் முடியும் காலத்தில்; பெய்ய என்று
எழுந்த மாரிக்கு -
பெரு மழைபெய்வதற்கு மேற்கிளம்பிய மேகத்துக்கு;
உவமை சால் பெருமை பெற்றார் - உவமையாதற்கு ஏற்ற பெருமையைப்
பெற்றவர்களாய் விளங்கினர்.

     அந்த அரக்கவீரர் பிரளய காலத்தில் வானத்துத் தோன்றும் மேகக்
கூட்டத்தை ஒத்தனர் என்பதாம்.                                (10)

5499.

‘பனி உறுசெயலை சிந்தி, வேரமும் பறித்தது,
                                 அம்மா !
தனி ஒரு குரங்குபோலாம் ! நன்று நம் தருக்கு !’
                                 என்கின்றார் !
‘இனி ஒரு பழிமற்று உண்டோ இதனின் ?’ என்று
                            இரைத்துப் பொங்கி,
முனிவுறு மனத்தின்தாவி, முந்துற முடுகுகின்றார்.

     பனிஉறு செயலைசிந்தி - குளிர்ச்சி பொருந்தியஅசோகவனச்
சோலையை அழித்து; வேரமும் பறித்தது - அங்கிருந்த சயித்த
மண்டபத்தையும் அடியோடு பெயர்த்து அழித்தது; தனி ஒரு குரங்கு
போலாம் -
தனியாய் வந்த ஒரு குரங்கு என்றால்; நன்று நம்தருக்கு
என்கின்றார் -
நம் வலிமை நன்றாயிருந்தது என்று சொல்கின்றவர்களாய்;
இதனின் மற்று ஒரு பழி இனி உண்டோ - இதைவிட வேறொரு
அவமானம்அரக்கர் குலத்துக்கு இன்னும் உள்ளதோ ?; என்று இரைத்து -
என்றுஆரவாரம் செய்து; பொங்கி - கொதித்து; முனிவுறு மனத்தின் தாவி
முந்துறமுடுகு கின்றார் -
கோபம் கொண்ட மனத்தோடு முற்பட விரைந்து
செல்பவரானார்கள்.

     வேரமும்; உம்மை,உயர்வு சிறப்பு. குரங்கு போலாம் என்பது இழிவுப்
பொருளில் ஒப்பில் போலியாக வந்தது.                          (11)