பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்517

சிலையும் கோட்டி -தம்புருவங்களையும் விற்களையும் வளைத்து; புகை
உயிர்த்து உயிர்க்கின்றாரும் -
(கோபத்தீயால்) புகையை வெளிப்படுத்தி
பெருமூச்சு விடுகின்றவர்களும்; ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து
உருக்கின்றாரும் -
ஒருவரை ஒருவர் முன்னிட்டு, முறை தவறியதனால்
(தவறியவர் மீது) கோபம் கொள்கின்றவர்களும்; இலங்கை விரிவு இலது
என்று -
இலங்கைநகர், வீரர்கள் செல்வதற்கு ஏற்ற பரப்பு உடையதன்று என்ற
காரணத்தால்; வழிபெறார் விழிக்கின்றாரும் - தாம் செல்லும் வழியைப்
பெறாதவர்களாய், இன்னது செய்வது என்று அறியாமல் மருண்டு விழித்துக்
கொண்டிருக்கின்றவர்களும்.

     புருவம்கோட்டுதல், சினத்தில் தோன்றும் மெய்ப்பாடு. சிலம் -
அரங்கேற்று காதை. வெகுண்டோன் அவிநயம்.                    (13)

5502.

வாள் உறைவிதிர்க்கின்றாரும், வாயினை
                          மடிக்கின்றாரும்,
தோள் உறத்தட்டிக் கல்லைத் துகள்படத்
                          துகைக்கின்றாரும்,
தாள் பெயர்த்துஇடம் பெறாது தருக்கினர்
                          நெருக்குவாரும்,
கோள் வளை எயிறுதின்று தீ எனக்
                          கொதிக்கின்றாரும்,

     வாள் உறைவிதிர்க் கின்றாரும் - வாளை உறையினின்றும்எடுத்து
அசைக்கின்றவர்களும்; வாயினை மடிக்கின்றாரும் - (கோபத்தால்) தம்
வாயிதழ்களை மடிக்கின்றவர்களும்; தோள் உற தட்டி - (தம்
வீரத்தைக்காட்ட, கைகளால்) தோள்களை நன்றாகத் தட்டிக் கொண்டு;
கல்லை துகள் படத் துகைக்கின்றாரும் -
(வழியிற் பட்ட)
பெருங்கற்களையும் தூளாகப் போகும்படி நொறுக்குகின்றவர்களும்; தாள்
பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும் -
தம் கால்களை
(நடக்க) பெயர்த்து மேலே அடி வைப்பதற்கு இடம் கிடைக்காமல்
செருக்குகின்றவர்களும்; கோள் வளை எயிறு - வலிய வளைவான தம்
பற்களைக்; தின்று தீ எனக் - கடித்து நெருப்பை போலக்; கொதிக்கின்
றாரும்-
கொதித்து எழுகின்றவர்களும் (ஆயினர்).        (14)