மெய்யன் என்பதற்குஉடம்பைப் பெற்றவன் என்று கூறின், வானை நிரப்பியது வாலா, மேனியா என்னும் ஐயப்பாடும் இவனுக்குக் குறைவும் உண்டாக்கும். ஆதலின் மெய்யன் என்பது அனுமன் என்று கூறப்பட்டது. ‘மெய்ம்மை பூண்டான்’ என்று 61-ஆம் பாடல் பேசும். கோள் - வலிமை.        (64) |     4805. | மூன்றுற்றதலத்திடை முற்றிய          துன்பம்வீப்பான்     ஏன்றுற்றுவந்தான் வலி மெய்ம்மை          உணர்த்துநீ என்று     ஆன்றுற்றவானோர் குறை நேர          அரக்கிஆகித்     தோன்றுற்றுநின்றாள் சுரசைப் பெயர்ச்          சிந்தைதூயாள்.    |  
      ஆன்று உற்றவானோர் - அறிவு நிரம்பி அங்கு வந்த தேவர்கள்; உற்ற மூன்று தலத்திடை - பொருந்திய மூன்று உலகத்தில்; முற்றிய துன்பம் வீப்பான் - முதிர்ந்த துன்பத்தை ஒழிக்கும்படி; ஏன்றுற்று வந்தான் - ஏற்றுக்கொண்டு வந்துள்ள அனுமானின்; மெய்ம்மை வலிநீ உணர்த்து - வலியின் உண்மையை எங்கட்கு நீ அறிவிப்பாயாக; என்று குறை நேர -     என்று வேண்டிக் கொள்ள; சுரசைப்பெயர் சிந்தை தூயாள் - சுரசை என்ற     பெயரை உடைய தூய மனத்தைஉடையவள்; அரக்கி ஆகி     தோன்றுற்றுநின்றாள்-(அனுமனுக்கு எதிரில்)அரக்கி வடிவத்துடன் தோன்றி     நின்றாள்.           அனுமன் வலிமையைஎங்கட்கு அறிவிக்க என்று தேவர் வேண்டிக் கொள்ள சுரசை அரக்கியாகி அனுமனுக்கு எதிரே தோன்றினாள். சுரசையை, தாட்சாயணி என்றும், நாகமாதா என்றும் கூறுவர். வால்மீகம், நாகமாதா (சுந்தர 1-162) என்றும், தாட்சாயணி (சுந்தர 187) என்றும் கூறும்.             (65) |     4806.  | பேழ்வாயொர் அரக்கி உருக்கொடு          பெட்பின்ஓங்கி     கோள்வாய் அரியின் குலத்தாய்; கொடுங்          கூற்றும்உட்க     வாழ்வாய் எனக்குஆமிடமாய் வரு          வாய்கொல் என்னா    |  
      |