வரைகளைஇடறுமின் என்றால் - மலைகளை இடறித் தள்ளுங்கள் என்றாலும்; மறிகடல் பருகுமின் என்றால் - அலை புரளுகின்ற கடல் நீரைக் குடித்து விடுங்கள் என்றாலும்; இரவியை விழ விடும் என்றால் - சூரியனைக் கீழே விழும்படி தள்ளிவிடுங்கள் என்றாலும்; எழு மழை பிழியுமின் என்றால் - வானத்தில் செல்லுகின்ற மேகத்தைப் பிழிந்து விடுங்கள் என்றாலும்; அரவினது அரசனை தரையினொடு அரையுமின் என்றால் - பாம்பரசனாகிய ஆதி சேடனை, தரையோடு சேர்த்து அரைத்து விடுங்கள் என்றாலும்; தரையினை எடும் எடும் என்றால் - இந்தப் பூமியைப் பெயர்த் துஎடுத்து விடுங்கள் என்றாலும்; ஒருவர் அது அமைதல் சமைந்தார் ஒன்றோ- ஒருவரே, அத் தொழிலைச் செய்து முடிக்கத்தக்கவராவர். (இவர்கள்வல்லமை) இவ்வளவு மாத்திரமேயோ ? இவர்களது வல்லமை இத்தோடுஅடங்காது என்றபடி. இயற்கையின்இயல்புகளை மாற்றுவதற்கு. அரக்க வீரர்களுள் ஒருவரே போதும். என்பது கருத்து. (17) | 5506. | தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற, வெம் போர் மீளியின் இனம்என, வன் தாள் விரை புலி நிரை என, விண் தோய் ஆளியின் அணிஎன, அன்றேல், அலை கடல் விடம் என, அஞ்சார், வாளியின்விசைகொடு திண் கார் வரை வருவன என, வந்தார். |
தூளியின் நிமிர்படலம் போய் - (வீரர்கள்செல்வதால்) எழுந்த புழுதியின் தொகுதி மேலே சென்று; இமையவர் விழி துற - தேவர்களின் கண்களைத் தூர்த்துவிட; வெம் போர் மீளியின் இனம் என - கொடிய போர் செய்யவல்ல பேய்களின் கூட்டம் என்னும் படியாகவும்; வன் தாள் விரை புலி நிரை என - வலிய கால்களால் விரைந்து செல்லும் புலிக் கூட்டங்கள் என்னும்படியாகவும்; விண்தோய், ஆளியின் அணி என - வானத்தில் பாய்ந்து செல்லும் சிங்கங்களின் கூட்டம் என்னும்படியாகவும்; அன்றேல், அலை கடல் விடம் என - அல்லாவிடில், கடலினின்றும் தோன்றிய ஆலகால |