பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்523

     எவரினும் அதிகம்உயர்ந்தான் - யாவரினும் மிகவும்சிறந்த
அனுமன்;முந்தே - முதலில்; இது இதம் இயல் - தான், இந்த
அசோகவனத்தைஅழித்தது நல்ல செயல் என்று; இயைவுற இனிது
தெரிந்தான் -
பொருத்தமாக நன்கு அறிந்து கொண்டான்; பதம் இயல்
அறிவு பயந்தால் -
பக்குவமுடைய அறிவு தோன்றினால்; அதின் நல பயன்
உளது உண்டோ -
அதைக் காட்டிலும் நல்லதான பயன் தரத்தக்கது வேறு
உண்டோ ?(இல்லையென்றபடி); கடிபொழில் சிதைவு இயல் ஒன்றே -
காவலுள்ளஅசோக வனத்தை அழித்ததான செய்கை ஒன்று மட்டுமே; சிதறிய
செயல்தரு திண்போர் உதவு இயல் -
(அரக்கர்) தோற்றோடுகின்ற
செயலைஉண்டாக்கக் கூடிய வலிய போரை உதவி நின்ற தன்மைகண்டு;
இனிதின்உவந்தான் - பெரிதும் மகிழ் வெய்தினான்.

     முதலடியில் கூறப்பெற்ற செய்திக்கு இரண்டாம் அடி காரணமாய்
அமைந்துள்ளது. வேற்றுப் பொருள் வைப்பணி.                    (21)

அரக்கர், படைகளை ஏவ அனுமன் ஒரு மரத்தால்எதிர்த்தல்

5510.

‘இவன்  ! இவன் ! இவன் !’ என நின்றார்; ‘இது !’
                 என, முதலி எதிர்ந்தார்;-
பவனனின் முடுகிநடந்தார், பகல் இரவு உற
                             மிடைகின்றார்-
புவனியும், மலையும், விசும்பும், பொரு அரு நகரும்,
                            உடன் போர்த்
துவனியில் அதிர,விடம்போல் சுடர் விடு படைகள்
                            துரந்தார்.

     பவனனின் முடுகி்நடந்தார் - காற்றை விட விரைவாகநடந்து வந்த
அரக்கர்கள்; பகல் இரவு உறமிடை கின்றார் - பகற்காலத்திலேயே இரவு
போல இருளாகும் படி நெருங்கி; இவன் இவன் இவன் என நின்றார் -
இவன்தான் இவன்தான் இவன் என்று குறிப்பித்துக் காட்டுபவர்களாய்; இது
என முதலி எதிர்ந்தார் -
இதுவே அந்தக் குரங்கு என்று சொல்லி, முற்பட்டு
எதிர்ப்பவர்களாகி; புவனியும் மலையும் விசும்பும் பொருவரு நகரும் -
பூமியும் மலையும், ஆகாயமும், ஒப்பில்லாத இலங்கை நகரமும்; உடன்
போர்த் துவனியில் அதிர -
ஒரு சேரப் போர் முழக்கத்தினால் நடுங்கும்
படியாக; விடம் போல் சுடர் விடு படைகள் துரந்தார் -