பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்525

 

உற வரு துணைஎன அன்றோ, உதவிய அதனை
                                உவந்தான்;
நிறை கடல்கடையும் நெடுந் தாள் மலை என,
                         நடுவண் நிமிர்ந்தான்.

     அறவனும் -அறவடிவினனான அந்த அனுமனும்; அதனை
அறிந்தான் -
அரக்கர்கள் நெருங்கி வந்து படைகள் வீசுவதை அறிந்து;
அருகினில் அழகின் அமைந்தார் -
தனது பக்கத்தில் சிறப்பாக வந்து
பொருந்திய அரக்கர்கள்; இற, இனின் உதவு நெடுந்தார் உயர் மரம் ஒரு
கை இயைந்தான் -
இறப்பதற்கு, இனிமையாக உதவக் கூடிய நீண்ட
ஒழுங்கான மேன்மையுற்ற மரம் ஒன்றைத் தனது கையில் எடுத்தான்; உற வரு
துணை என அன்றோ -
மனத்திற்கு ஏற்ப உதவி செய்ய வருகின்ற ஒரு
துணைவனைப் போல அல்லவா இது உள்ளது என்று; உதவிய அதனை
உவந்தான் -
தக்க சமயத்தில் உதவுமாறு கிடைத்த அம்மரத்தை விரும்பிக்
கொண்டவனாய்; நிறை கடல் கடையும் நெடுந்தாள் மலை என நடுவண்
நிமிர்ந்தான் -
பால் நிறைந்த கடலைக் கடைதற்குரிய பெரிய அடியை
உடையமந்தர மலையைப் போல அரக்கர் நடுவில் ஓங்கி எழுந்தான்.

     அரக்கர் கடலைக்கலக்கப் போவதால் மந்தர மலை அனுமனுக்கு
உவமை ஆயிற்று.                                          (24)

5513.

பரு வரைபுரைவன வன் தோள், பனிமலை அருவி
                                 நெடுங் கால்
சொரிவன பல என,மண் தோய் துறை பொரு
                           குருதி சொரிந்தார்;
ஒருவரை ஒருவர்தொடர்ந்தார்; உயர் தலை உடைய
                           உருண்டார்-
அரு வரை நெரியவிழும் பேர் அசனியும் அசைய
                           அறைந்தான்.

     அரு வரை நெரியவிழும் பேர் அசனி்யும் அசைய அறைந்தான் -
(அனுமன்)பெரிய மலைகள் நெரிந்து தூளாகுமாறு, விழுகின்ற பெரிய
இடிகளும், அவ்வோசையில் குலைந்து போக, அம் மரத்தைக் கொண்டு
அரக்கர்களை ஓங்கி அடித்தான்; (அதனால்) பனிமலை அருவி நெடும் கால்
பல சொரிவன என -
குளிர்ந்த மலைகள் அருவியாக  நீண்ட வாய்க்கால்
பலவற்றைச் சொரிவன