பக்கம் எண் :

528சுந்தர காண்டம்

கூடியவர்களாய்; உதைபட - அனுமனால் உதைபட்டு; உரனும் நெரிந்தார் -
தம்மார்பும் நெரியப்பட்டு; உதறொடு குருதி - நடுக்கத்தோடு இரத்தத்தையும்;
உமிழ்ந்தார் - வெளியே கக்கினர்; இருளின் மிடைந்தார் - இருளைப்
போன்று (கறுத்த வடிவத்துடன்) அங்குக் கூடி நெருங்கிய சில வீரர்கள்; பொடி
இடை புதை பட நெடிது புரண்டார் -
கீழே கிடந்த புழுதியின் இடையே
புதைந்து போக நெடுந் தூரம் புரண்டனர்; விதைபடும் உயிரர் விழுந்தார் -
விதைகள் போலச் சிதறிய உயிர்களை உடையவர்களாய் வெற்றுடலாய்
விழுந்திட்டார்கள்; விளியொடு விழியும் இழந்தார் - சிலர், வீர ஒலியும்
கண்களும் இழந்தவர்களாயினர். (28)

5517.

அயல்,அயல், மலையொடு அறைந்தான்; அடு பகை
                                           அளகை அடைந்தார்;
வியல் இடம்மறைய விரிந்தார்; மிசை உலகு அடைய
                                            மிடைந்தார்;
புயல் தொடுகடலின் விழுந்தார்; புடை புடை
                                            சிதைவொடு சென்றார்,
உயர்வுறவிசையின் எறிந்தான்; உடலொடும் உலகு
                                            துறந்தார்.

அயல் அயல்மலையொடு அறைந்தான் - (அனுமன்
அவ்வரக்கர்களை) பக்கங்களில் உள்ள மலைகளில் ஓங்கி அடித்தான்; அடு
பகை அளகை அடைந்தார் -
(அதனால் சிலர்) கொல்லவல்ல பகைமை
உடைய அளகா பட்டணத்தை அடைந்தார்கள்; வியல் இடம் மறைய
விரிந்தார் -
(வேறு சிலர்) ஆகாயம் மறைந்து போகும்படி பரவினார்கள்;
மிசை உலகு அடைய மிடைந்தார் - (இன்னும் சிலர்) மேலுலகம் முழுவதும்
செறிந்து காணப்பட்டனர்; புடை புடை சிதைவொடு சென்றார் - சிலர், நாற்
புறங்களிலும் உடல் சிதைய ஓடினார்கள்; உயர்வுற விடையின் எறிந்தான் -
மற்றும் சிலரை மேலே போகுமாறு வேகமாக வீசினான்; உடலொடும் உலகு
துறந்தார் -
(அதனால் அவர்கள்) உடம்புகளுடன் இந்த உலகத்தை நீத்து
விண்ணுலகு எய்தினார்கள். (29)

                                          கலிநிலைத் துறை

5518.

பற்றித்தாளொடு தோள் பறித்து எறிந்தனன்; பாரின்,
இற்ற வெஞ் சிறைவெற்புஇனம் ஆம் எனக்
                                            கிடந்தார்;