பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்529

 

கொற்றவாலிடைக் கொடுந் தொழில் அரக்கரை
                                 அடங்கச்
சுற்றி வீசலின்,பம்பரம் ஆம் எனச் சுழன்றார்.

     பற்றித் தாளொடுதோள் பறித்து எறிந்தான் - (அனுமன் சில
அரக்கர்களை) பிடித்து, அவர்களது கால்களையும் தோள்களையும் பிய்த்து
வீசினான்; வெம்சிறை இற்ற வெற்பு இனம் ஆம் என பாரின் கிடந்தார் -
(கால்களும் தோள்களும் அற்ற அரக்கர்கள்) கொடிய இறகுகள் அறுபட்ட
மலைக்கூட்டங்கள் போல பூமியில் விழுந்து கிடந்தனர்; கொற்ற வாலிடை
அடங்க -
வெற்றி பொருந்திய தனது வாலிலே அடக்கியிருக்கச் செய்து;
கொடும் தொழில் அரக்கரை சுற்றி வீசலின் - கொடிய செயல்களை உடையசில அரக்கர்களைச் சுழற்றிய வீசியதனால்; பம்பரம் ஆம் என
சுழன்றார் -
பம்பரம் போலச் சுழன்றார்கள்.

     அனுமன் வால்,கயிறாகவும், அரக்கர்கள் பம்பரங்களாகவும், அனுமன்
பம்பரம் விடுவோனாகவும், இங்கு உவமிக்கப் பெற்றுள்ளன.          (30)

5519.

வாள்கள் இற்றன; இற்றன வரி சிலை; வயிரத்
தோள்கள்இற்றன; இற்றன சுடர் மழுச் சூலம்;
நாள்கள் இற்றன;இற்றன நகை எயிற்று ஈட்டம்;
தாள்கள் இற்றன;இற்றன படையுடைத் தடக் கை.

     வாள்கள் இற்றன- (அனுமன்தாக்கியதனால்) அரக்கர் சிலரது
வாள்கள் ஒடிந்து போயின; வரி சிலை இற்றன - கட்டமைந்த விற்கள்
முறிந்து போயின; வயிரத் தோள்கள் இற்றன - சிலரது வயீரம் போன்ற
தோள்கள் அற்றுப் போயின; சுடர் மழுச்சூலம் இற்றன - ஒளியுள்ள
மழுக்களும் சூலங்களும் முறிந்து போயின; தாள்கள் இற்றன - சிலரது
கால்கள் ஒடிந்தன; நாள்கள் இற்றன நகை எயிற்று ஈட்டம் இற்றன -
நட்சத்திரங்கள் விழுவதைப் போல. ஒளி விளங்கும் பற்களின் தொகுதிகள்
அற்றுவீழ்ந்தன; படை உடைத்தடக்கை இற்றன - அவர்களின் ஆயுதங்களை
உடைய கைகள் அற்று வீழ்ந்தன.

     நகை எயிறுகளுக்குநட்சத்திரங்கள் உவமை. இச்செய்யுள் சில சுவடியில்
இல்லை. வருணனை மயமாகத் தொடர்ந்து மிகப் பல பாடல்கள் பாடுவது
அருமையான திறனைக் காட்டுவதாகும். பாடுவது