முடியுமேனும் அவற்றைப்படிப்பவர் அலுக்காமல் படிக்க வேண்டுமே ! அவ்வாறு அலுப்புத் தோன்றாவண்ணம் சந்தங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பதன் மூலம் சாதிக்கிறார் கவிச் சக்கரவர்த்தி. ஒரே யாப்பு வகையிலும் சொல்லாட்சி மாற்றியும் நடையை மாற்றியும் வருணனைப் பாடல்களால் ஏற்படக் கூடிய அலுப்பைக் கம்பர் தவிர்த்து விடுகிறார். முந்திய (5518) செய்யுளும் இச் செய்யுளும் ஐஞ்சீர் கொண்ட கலித்துறைகளே; ஆயினும் இச்செய்யுளின் சொல்லமைப்பையும் நடையையும் கருதிப் பார்த்து ஏனைய கலித்துறைகளோடு ஒப்பிட்டுக் காண்க. (31) | 5520. | தெறித்தவன் தலை; தெறித்தன செறி சுடர்க் கவசம்; தெறித்த பைங்கழல்; தெறித்தன சிலம்பொடு பொலந் தார்; தெறித்த பல்மணி; தெறித்தன பெரும் பொறித் திறங்கள்; தெறித்தகுண்டலம்; தெறித்தன கண் மணி சிதறி. |
வன்தலை தெறித்த- சிலருடைய வலியதலைகள் அப்பால் சிதறி விழுந்தன; செறி சுடர்க் கவசம் தெறித்தன - நிறைந்த ஒளியுள்ள கவசங்கள் சிதறின; பைங்கழல் தெறித்த - பசும் பொன்னாலாகிய வீரக்கழல்கள் சிதறி விழுந்தன; பொலந்தார் சிலம் பொடு தெறித்தன - பொன்னரி மாலைகள் ஓசையோடு விழுந்தன; பல்மணி தெறித்த - (ஆபரணங்களில் அழுத்தியிருந் த)இரத்தினங்கள் பலவும் சிதறி விழுந்தன; பெரும் பொறித் திறங்கள்தெறித்தன - அவர்கள் அணிந்திருந்த பெரிய வீரபட்டம் முதலிய விருதுகள்சிதறி விழுந்தன; குண்டலம் தெறித்த - அவர்களது குண்டலங்கள் சிதறின;கண்மணி சிதறி தெறித்தன - கண்ணின் கருமணிகள் சிதறுண்டு வீழ்ந்தன. சிலம்பு - ஓசை;பொறி - வீரபட்டம், விருது என்பன, ‘வேந்தன் பெயரால் பொறியும் பெற்றான்.’ (சீவக சிந்தாமணி - 1792) (32) | 5521. | உக்க பற்குவை; உக்கன, துவக்கு எலும்பு உதிர்வுற்று; உக்க முற்கரம்;உக்கன, முசுண்டிகள் உடைவுற்று; உக்க சக்கரம்;உக்கன, உடல் திறந்து உயிர்கள்; உக்க கப்பணம்;உக்கன, உயர் மணி மகுடம். |
|