பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்531

     பல்குவை உக்க -அரக்கர்களது பற்களின் குவியல்கள் சிந்தின;
துவக்கு எலும்பு உதிர்வுற்று உக்கன - தோல்களும் எலும்புகளும் சிதறி
அழிந்தன; முற்கரம் உக்க - சம்மட்டி என்ற ஆயுதங்கள் சிதறி விழுந்தன;
முசுண்டிகள் உடைவுற்று உக்கன - முசுண்டி என்னும் ஆயுதங்களும்
ஒடிந்து சிதறின; சக்கரம் உக்க - சக்கரம் என்னும் ஆயுதங்கள் சிதறின;
உடல் திறந்து உயிர்கள் உக்கன - உடல்கள் பிளக்கப்பட்டு உயிர்கள்
சிந்திப் போயின; கப்பணம் உக்க - அரிகண்டம் என்னும் ஆயுதங்கள்
சிதறிப் போயின; உயர் மணி மகுடம் உக்கன - சிறந்த இரத்தின கிரீடங்கள்
சிதறிப் போயின.

     துவக்கு - தோல்;இறுதல் - அற்று நீங்குதல்; தெறித்தல் - சிதறி
நீங்குதல்; உகுதல் - சிந்தி நீங்குதல்.                            (33)

5522.

தாள்களால்பலர், தடக் கைகளால் பலர், தாக்கும்
தோள்களால்பலர், சுடர் விழியால் பலர், தொடரும்
கோள்களால் பலர், குத்துகளால் பலர், தம் தம்
வாள்களால் பலர், மரங்களினால் பலர்,-மடிந்தார்.

     தாள்களால் பலர்- அனுமனதுகால்களினால் பலரும்; தடக்கைகளால்
பலர் -
பெரிய கைகளால் பலரும்; தாக்கும் தோள்களால்
பலர் -
மோதும்தோள்களால் பலரும்; சுடர் விழியால் பலரும் - ஒளி
வீசும் விழிகளில்உண்டாகும் நெருப்பினால் பலரும்; தொடரும் கோள்களால்
பலர் -
பற்றிப்பிடித்தலால் பலரும்; குத்துகளால் பலர் - கைகளால்
குத்துதலினால் பலரும்;தம் தம் வாள்களால் பலரும் - அவரவர்களது
வாள்களாலேயே பலரும்;மரங்களினால் பலர் - மரங்களைக் கொண்டு
எறிவதால் பலரும்; மடிந்தார் -இறந்தார்கள்.

     கோள - பற்றிக்கொள்ளுதல். ‘தொடரும் கோள்’ - மேன் மேல்
மிகுகின்ற வலிமை - என்றும் பொருள்                          (34)

5523.

ஈர்க்க,பட்டனர் சிலர்; சிலர் இடிப்புண்டு பட்டார்;
பேர்க்க,பட்டனர் சிலர்; சிலர் பிடியுண்டு பட்டார்;
ஆர்க்க,பட்டனர் சிலர்; சிலர் அடியுண்டு பட்டார்;
பார்க்க, பட்டனர் சிலர்; சிலர் பயமுண்டு பட்டார்.

     சிலர், ஈர்க்கபட்டனர் - சில அரக்கர்கள்,அனுமன் அவர்களைப்
பிடித்து இழுத்தலால் இறந்தார்கள்; சிலர் இடி உண்டு