பட்டனர் - மற்றும் சிலர்,இடிக்கப்பட்டு இறந்தனர்; சிலர் வேர்க்க பட்டனர்- சிலர், அவ்விடம் விட்டுப் பெயர்த்து எறியப்பட்டு இறந்தனர்; சிலர் பிடிஉண்டு பட்டார் - வேறு சிலர் அனுமனால் பிடிக்கப்பட்டு இறந்தனர்; சிலர்ஆர்க்க பட்டனர் - இன்னும் சிலர் கட்டப்பட்டு இறந்தனர்; சிலர் அடிஉண்டு பட்டார் - மற்றுஞ் சிலர், அனுமனால் அடிக்கப்பட்டு இறந்தனர்;சிலர் பார்க்க பட்டனர் - வேறு சிலர், அனுமன் கோபித்துப் பார்த்ததாலேஇறந்தனர்; சிலர் பயமுண்டு பட்டனர் - வேறு சிலர் பயந்து இறந்தனர். ஆர்த்தல் -கட்டுதல்; ‘ஆர்த்த கணவன் அகன்றான்’ (சிலப் - 9; 37) (35) | 5524. | ஓடிக்கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும் கூடிக் கொன்றனன்சிலவரை; கொடி நெடு மரத்தால் சாடிக்கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித் தேடிக்கொன்றனன் சிலவரை-கறங்கு எனத் திரிவான். |
கறங்கு எனத்திரிவான் - காற்றாடி போன்றுதிரிபவனான அனுமன்; சிலவரை உடல் உடல் தோறும் ஓடிக் கொன்றனன் - சில அரக்கர்களை, ஒவ்வொருவர் இருக்கும் இடத்திலும் ஓடிப் போய், கொன்றான்; சிலவரை கூடி கொன்றனன் - சிலரை, நெருங்கிக் கொன்றான்; சிலவரை கொடி நெடுமரத்தால் சாடிக் கொன்றனன் - சிலரை, கொடிகள் படர்ந்த பெரிய மரத்தினால் அடித்துக் கொன்றான்; பிணந் தொறும் தடவி சிலரைத் தேடித் கொன்றனன் - பிணக்குவியல்களிடையே பதுங்கிக் கிடந்த சிலரை தேடிக் கண்டுபிடித்துக் கொன்றான். (36) | 5525. | முட்டினார்பட, முட்டினான்; முறை முறை முடுகிக் கிட்டினார் பட,கிட்டினான்; கிரி என நெருங்கிக் கட்டினார் பட,கட்டினான்; கைகளால் மெய்யில் தட்டினார் பட,தட்டினான்-மலை எனத் தகுவான். |
மலை எனத்தகுவான் - மலை எனச்சொல்லத்தக்கவனாய (பேருருவம் பெற்ற) அனுமன்; முட்டினார் பட முட்டினான் - தன்னை முட்டின அரக்கர் இறக்கும்படி (தான் அவரை) முட்டினான்; முறை முறை முடுகி கிட்டினார் பட கிட்டினான் - வரிசை வரிசையாகத் தன்னை நெருங்கின அரக்கர்கள் அழியுமாறு |