தானும் அவர்களைநெருக்கினான்; கிரி என நெருங்கி கட்டினார் பட கட்டினான் - மலை போன்றவர்களாய் நெருங்கி வந்து (தமது கைகளால் தன்னைக்) கட்டியவர்கள் இறக்குமாறு, தான் அவர்களை இறுகக் கட்டினான்; கைகளால் மெய்யில் தட்டினார் பட தட்டினான் - தம் கைகளால் (தனது) உடம்பில் தட்டினவர்கள் இறக்கும்படி (தான் அவர்களைத்) தட்டினான். தன்னைக் கொல்லவந்தவர்களை அவர்கள் செய்த வண்ணமே தானும் செய்து அவர்களைக் கொன்றான் அனுமன். (37) | 5526. | உறக்கினும்கொல்லும்; உணரினும் கொல்லும்; மால் விசும்பில் பறக்கினும்கொல்லும்; படரினும் கொல்லும்; மின் படைக் கை, நிறக் கருங்கழல், அரக்கர்கள் நெறிதொறும் பொறிகள் பி்றக்க நின்றுஎறி படைகளைத் தடக் கையால் பியையும். |
உறக்கினும்கொல்லும் - அரக்கர் சோர்வுற்றநிலையிலும் அனுமன் அவர்களைக் கொல்வான்; உணரினும் கொல்லும் - நல்லுணர்வு பெற்ற நிலையிலும் அரக்கர்களைக் கொல்வான்; மால் விசும்பில் பறக்கினும் கொல்லும் - பெரிய ஆகாயத்தில் அரக்கர்கள் பறந்தாலும் அவர்களைக் கொல்லுவான்; படரினும் கொல்லும் - தரையில் நடந்து சென்றாலும் அவர்களைக் கொல்வான்; மின் படைக்கை நிறக் கருங் கழல் அரக்கர் - மின்னலை உண்டாக்கும் படை உடைய கையைப் பெற்ற நிறமுடைய வலிய வீரக்கழல் அணிந்த அரக்கர்கள்; நெறிதொறும் - வழிகளில் எல்லாம்; பொறிகள் பி்றக்க - தீப் பொறிகள் தோன்ற; நின்று எறிபடைகளை - நின் றுவீசி எறியும் ஆயுதங்களை; தடக்கையால் பியையும் - அனுமன் தனது பெரிய கைகளால் பிசைந்து நொறுக்குவான். பிறங்க -தோன்ற; எதுகை நோக்கி வலிந்தது; ‘பிறக்க’ என ஆயிற்று. ‘விளங்க’ என்றும் பொருள் கொள்ளலாம். பியைதல் - பிசைதல். (38) | 5527. | சேறும்வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய, நீறு சேர் நெடுந்தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப, |
|