| | ஆறு போல் வரும்குருதி, அவ் அனுமனால் அலைப்புண்டு, ஈறு இல்வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ் இலங்கை. |
மூளையும் நிணமும்- அவ்வரக்கர்களுடைய மூளையும் கொழுப்புக்களும்; சேறும் வண்டலும் ஆய்த்திணிய - சேறும் வண்டலும் போன்று நெருங்கவும்; நீறு சேர் நெடும் - புழுதிகள் சேர்ந்த நீண்ட; தெரு எலாம் - அந்த இலங்கையின் தெருக்கள் முழுதும்; நீத்த மாய் நிரம்ப - வெள்ளமாகி நிறையவும்; ஆறு போல் வரும் குருதி - ஒரு நதியைப் போல பெருகி வருகின்ற இரத்தம்; அ அனுமனால் அலைப்புண்டு - அந்த அனுமனால் அங்கும் இங்கும் அலையும் படிதள்ளப் பட்டு; அ இலங்கை - அந்த இலங்கை நகர்; ஈறு இல் வாய் தொறும் உமிழ்வது ஒத்தது - முடிவில்லாத பல வாய்களின் வழியே கக்குவதுபோல் விளங்கியது. இலங்கையில்உள்ள தெருக்கள் நீளமாக இருத்தலால், ஈறில் வாய் தொறும் எனக்கூறப் பட்டது. (39) அனுமன் பெரும்போர் விளைத்தல் | 5528. | கருது காலினும், கையினும், வாலினும் கட்டி, சுருதியே அன்னமாருதி மரத்திடைத் துரப்பான்; நிருதர்,எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார்; குருதி சாறு எனப்பாய்வது, குரை கடல் கூனில். |
சுருதியே அன்னமாருதி - வேதத்தையே ஒத்த (நிலை பெறுதலும் தவறாமையும் உடைய) அனுமன்; கருது காலினும் கையினும் வாலினும் கட்டி - எண்ணத்தக்க காலினாலும் கைகளினாலும் வாலினாலும் சில அரக்கர்களைச் சேர்த்துக் கட்டி; மரத்திடைத்துரப்பான் நிருதர் - மரத்தின் நடுவில் மோதுவதால் (அப்போது) அந்த அரக்கர்கள்; எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார் - ஆலையிலிட்டு ஆட்டுகின்ற கரும்பு போன்று உடல் நொறுங்கிப் போனார்கள்; குருதி - (அவ்வுடலிலிருந்து பெருகுகின்ற) இரத்தம்; சாறு என குரைகடல் கூனில் பாய்வது - கருப்பஞ்சாறு போல ஒலிக்கின்ற கடலாகிய ஒரு மிடாவில் போய் பாய்கின்றதாகும். |