பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்535

     கூன் - வாய்அகன்று உட்குழிந்த மண் பாத்திரம். இது மிடா
எனப்படும். ஆலையில், கருப்பஞ்சாறு விழுவதற்குவைக்கப் பட்டிருப்பது. ‘கருப்
பேந்திரத்து ஒழுகு சாறகன் கூனை’ (கம்ப. 4641). கரும்பு, அரக்கர்களுக்கும்,
கரும்பு ஆலை மரங்களின் நெருக்கத்துக்கும், கரும்புச் சாறு, உடல்களின்
இரத்தத்துக்கும், பெரும் பாத்திரம் கடலுக்கும் உவமைகளாக வந்தன.   (40)

5529.

எடுத்துஅரக்கரை எறிதலும், அவர் உடல் எற்ற,
கொடித் திண்மாளிகை இடிந்தன; மண்டபம்
                          குலைந்த;
தடக் கையானைகள் மறிந்தன; கோபுரம் தகர்ந்த;
பிடிக் குலங்களும்புரவியும் அவிந்தன, பெரிய.

     அரக்கரை எடுத்து- அனுமன்அந்த அரக்கர்களைத் தூக்கி; எறிதலும்-
வீசிய அளவில்; அவர் உடல் எற்ற - அவர்களது உடல்
போய்த்தாக்கியதனால்; கொடித்திண் - கொடிகள் கட்டிய வலிய; மாளிகை
இடிந்தன-
உயர்ந்த வீடுகள் நொறுங்கிப் போயின; மண்டபம் குலைந்த -
மண்டபம்உருக்குலைந்து அழிந்து போயின; தடக்கை யானைகள் மறிந்தன
-
பெரியதுதிக்கைகளை உடைய ஆண் யானைகள் இறந்தன; பெரிய
பிடிக்குலங்களும்புரவியும் அவிந்த -
பெரிய பெண் யானைகளின்
கூட்டங்களும் பெரியகுதிரைக் கூட்டங்களும் அழிந்தன.

     பெரிய, குலம்என்பன, பிடிக்கும் புரவிக்கும் அடை மொழிகள்.
   (41)

5530.

தம் தம்மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார்;
தம் தம்மாதரைத் தம் கழலால் சிலர் சமைத்தார்;
தம் தம்மாக்களைத் தம் படையால் சிலர் தடிந்தார்;-
எற்றி மாருதிதடக் கைகளால் விசைத்து எறிய.

     மாருதி தடகைகளால் எற்றி விசைத்து எறிய - அனுமன் தனது
பெரிய கைகளினால், அடித்துக் கட்டித்தூக்கி வீசுதலினால்; சிலர் தம்தம்
மாடங்கள் தம் உடலால் தகர்த்தார் -
சில அரக்கர்கள் தங்கள் தங்கள்
வீடுகளை தமது உடம்புகளினால் உடைத்தார்கள்; சிலர், தம் தம் மாதரைத்
தம் கழலால் சமைத்தார் -
சில அரக்கர்கள் தங்கள் தங்கள் மனைவி
மார்களைத் தமது கால்களால் அழித்தார்கள்; சில, தம்தம் மாக்களைத் தம்
படையால் தடித்தார் -