பக்கம் எண் :

536சுந்தர காண்டம்

சில அரக்கர்கள்தங்கள் தங்களது குழந்தைகளைத் தமது ஆயுதங்களினால்
கொன்றார்கள்.

    அந்தஅரக்கர்களின் அழிவு, அவர்களது வீடு, மனைவி, மக்கள்
அழிவதற்கு உடன் காரணமாயிற்று என்பதாம்.                     (42)

5531.

ஆடல் மாக்களிறு அனையவன், அரக்கியர்க்கு
                           அருளி,
‘வீடு நோக்கியேசெல்க’ என்று, சிலவரை விட்டான்;
கூடினார்க்கு அவர்உயிர் எனச் சிலவரைக்
                           கொடுத்தான்;
ஊடினார்க்கு அவர்மனைதொறும் சிலவரை
                           உய்த்தான்.

     ஆடல் மா களிறுஅனையவன் - பகைவரைக் கொல்லும்
வலிமைபொருந்திய பெரிய ஆண் யானை போன்ற அனுமன்; அரக்கியர்க்கு
அருளி -
அரக்கியர் சிலர் படுகின்ற துன்பத்தைக் கண்டு அவர்கள் மேல்
கருணை கொண்டு; சிலரை வீடு நோக்கியே செல்க என்று விட்டான் -
சிலஅரக்கரை ‘உங்கள் வீடு நோக்கிச் செல்லுங்கள்’ என்று கொல்லாது
விட்டான்;சிலவரை, கூடினார்க்கு அவர் உயிர் என கொடுத்தான் - சில
அரக்கரை,அப்போதுதான் சேர்ந்தவராகிய இளம் பெண்களுக்கு உயிர்
போன்றுஇருப்பவர் என்று, கொல்லாது விடுத்தான்; ஊடினார்க்கு - ஊடல்
கொண்டமகளிர்களுக்கு, இரங்கி; அவர் மனை தொறும் சிலவரை
உய்த்தான் -
அவர் வீடு தோறும் அவர்களது கணவர் போய்ச் சேருமாறு
அவர்களைஅனுப்பி விட்டான்.

     இதனால்,அனுமனுக்கு வீரத்தோடு ஈரமும் (இரக்கம்) இருந்தது என்பது
புலப் படுகின்றது.                                            (43)

5532.

தரு எலாம்உடல்; தெற்றி எலாம் உடல்; சதுக்கத்து
உரு எலாம் உடல்;உவரி எலாம் உடல்; உள்ளூர்க்
கரு எலாம் உடல்;காயம் எலாம் உடல்; அரக்கர்
தெரு எலாம்உடல்; தேயம் எலாம் உடல்-சிதறி.

     சிதறி, தருஎலாம் உடல் - (அனுமன் வீசிஎறி்ந்ததனால்)
நாற்புறத்தி்லும் சிதறுண்டு மரங்களில் எல்லாம் அரக்கர்களது உடல்கள்; தெற்றி
எலாம் உடல் -
தெருத்திண்ணைகளில் எல்லாம் உடல்கள்; சதுக்கத்து
உருஎலாம் உடல் -
நாற்சந்தி கூடும்