பக்கம் எண் :

538சுந்தர காண்டம்

ஆக இச்செருவிளைவுறும் அமைதியில் - இவ்வாறு, இப்போர்
நடக்கும் சமயத்தில்; அரக்கர் மோகம் உற்றனர் ஆம் என - சில
அரக்கர்கள் அறிவு மயக்கம் கொண்டவர்கள் போல; முறை முறை
முனிந்தார் -
மேன் மேலும் கோபம் கொண்டவர்களாகி; மாகம் முற்றவும் -
வானிடம் முழுவதும்; மாதிரம் முற்றவும் வளைந்தார் - திக்குகள் முழுவதும்
சூழ்ந்து கொண்டவராய்; மேகம் ஒத்தனர் - கரிய மேகம் போல விளங்கினர்;
மாருதி வெய்யவன் ஒத்தான் -
அனுமன் சூரியனைப் போன்று
விளங்கினான்.

பலபடியாகச்சிதறுண்டு போன அரக்கர்கள், இச்சமயத்தில் சினம்
கொண்டு சூழ்வது அவர்களது அறிவின்மையின் செயல். இதை ‘மோகம்
உற்றனர்’ என்ற தொடர்காட்டுகிறது. மாகம் - வான்; மாதிரம் - திக்கு. (திசை)
(46)

5535.அடல்அரக்கரும், ஆர்த்தலின், அலைத்தலி்ன் அயரப்
புடை பெருத்து உயர் பெருமையின், கருமையின்
பொலிவின்
மிடல் அயில்படை மீன் என விலங்கலின், கலங்கும்
கடல்நிகர்த்தனர்-மாருதி மந்தரம் கடுத்தான்.

அடல் அரக்கரும்- வலிமைமிக்க அந்த அரக்கர்களும்;
ஆர்த்தலின், அலைத்தலின் -
இரைதலாலும்; (அனுமனால் இங்கும் அங்கும்)
அலைக்கப்படுவதாலும்; அயர புடை பெருத்து உயர் பெருமையின் -
(கண்டவர்) சோரும்படி பக்கங்கள் பருத்து உயர்ந்து தோன்றுகின்ற
பெருந்தோற்றத்தாலும்; கருமையின் பொலிவின் - கருநிறத்தாலும்,
மிகுதியாய் (நிறைந்து) காணப்படுவதாலும்; மிடல் அயில்படை மீன் என
விலங்கலின் -
அவர்கள் கொண்டுள்ள வலிய வேல்படைகள் மீன்கள்
போன்று விளங்குவதனாலும்; கலங்கும் கடல் நிகர்த்தனர் - (கடையும்
போது) கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பாக விளங்கினர்; மாருதி மந்தரம்
கடுத்தான் -
அனுமன், (கடலைக்கலக்கும்) மந்தரமலையை ஒத்தான்.

ஆர்த்தல்,அலைதல், பெருந் தோற்றம், கருமை, மீன் விலங்குதல்
அரக்கர்க்கும் கடலுக்கும் பொருந்தும் பொதுத்தன்மைகள். (47)

5536.கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ,
நிரை மணித் தலைநெரிந்து உக, சாய்ந்து உயிர்
நீப்பார்,