பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்539

 

சுரர் நடுக்குற அமுது கொண்டு எழுந்த நாள்,
                               தொடரும்
உரகர் ஒத்தனர்- அனுமனும் கலுழனே ஒத்தான்.

     கரதலத்தினும்,காலினும் வாலினும் கதுவ - அனுமன்  தனது
கைகளாலும், கால்களாலும், வாலினாலும் பற்றுதலினால்; நிரைமணித்தலை
நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் -
வரிசையாகக் கரிய நிறமுள்ள தமது
தலைகள் நசுங்கிச் சிதறுதலினால் மண்மீது விழுந்து உயிர்விடுகின்ற
கிங்கரர்கள்; சுரர் நடுக்குற அமுது கொண்டு எழுந்த நாள் -  தேவர்கள்
அஞ்சும்படி, அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு மேலே கிளம்பும் பொழுது;
தொடரும் உரகர் ஒத்தனர் -
(காவலிருந்து கவர வொட்டாது தடுக்கத்)
தொடர்ந்த பாம்புகளை ஒத்தனர்; அனுமனும் கலுழனே ஒத்தான் -
அனுமனும், (அமுதத்தோடு எழுந்த) கருடனை ஒத்திருந்தான்.        (48)

     மானம் உற்ற தம்பகையினால் முனிவுற்று வளைந்த - செருக்குக்
கொண்ட தமது பகைமைக் குணத்தினாலே, கோபம் கொண்டு (அனுமனைச்)
சூழ்ந்து கொண்டவரும்; மீன் உடைக்கடல் உலகினின் உள எலாம்
மிடைந்து -
மீன்களை உடைய கடலினால் சூழப்பட்ட இலங்கையிலே உள்ள
இடம் முழுவதும் நெருங்கியிருப்பவரும்; ஊன் அற கொன்று துகைக்கவும்
ஒழிவு இலா நிருதர் -
(கண்ணில் கண்டவர்) உடம்புகளை எல்லாம் அழித்
தொழிக்கவும் அழிந்திடாமல் பெருகித் தோன்றுபவருமான அரக்கர்கள்;
ஆனை ஒத்தனர் -
யானைகளைப் போன்றவரானார்கள்; அனுமன் ஆள்
அரி ஒத்தான் -
அனுமன் (மிருகங்களை) ஆளும் தன்மை உள்ள சிங்கத்தை
ஒத்தவனானான்.

    அரக்கர்களுக்குயானைத் திரளும், அனுமனுக்கு, சிங்கமும்
உவமைகளாக வந்தன.                                         (49)

5537.மானம்உற்ற தம் பகையினால், முனிவுற்று வளைந்த
மீனுடைக் கடல்உலகினின், உள எலாம் மிடைந்த
ஊன் அறக்கொன்று துகைக்கவும், ஒழிவு இலா
                                     நிருதர்
ஆனைஒத்தனர்-ஆள் அரி ஒத்தனன் அனுமன்.