தோமரம்உலக்கை கூர்வாள் - பெரிய தண்டாயுதம், உலக்கை, கூர்மையான வாளாயுதம்; சுடர்மழு, குலிசம் - ஒளி வீசுகின்ற எரியிரும்புப் படை, வச்சிராயுதம்; தோட்டி - அங்குசம்; அரம் தின்ற கூர்வேல் - அரத்தினால் அராவிக் கூராக்கப்பட்ட வேலாயுதங்கள்; தழல் ஒளி வட்டம் - நெருப்பின் சுவாலையை உடைய சக்கரம்; சாபம் - வில்; காமர்தண்டு - அழகிய தண்டாயுதம்; எழுக்கள் - இரும்புத் தண்டுகள்; காந்தும் கப்பணம் - ஒளி விடுகின்ற இரும்பு நெருஞ்சி முட்படைகள்; காலபாசம் - யமனுக்கு உரிய கயிற்றின் வடிவான ஆயுதங்கள்; மாமரம், வலயம் - பெரிய மரங்கள், வளையங்கள்; வெம்கோல் - கொடிய அம்புகள்; முதலிய வயங்க - முதலிய ஆயுதங்கள் விளங்கவும். திசைதொறும்செறிவ செல்ல என அடுத்த கவியோடு தொடரும். தாம், மாது, ஓ அடைகள். (6) 5556. | எத்தியஅயில், வேல், குந்தம், எழு, கழு முதல ஏந்தி, குத்தியதிளைப்ப; மீதில் குழுவின மழை மாக் கொண்டல் பொத்து உகு பொருஇல் நல் நீர் சொரிவன போவ போல, சித்திரப்பதாகை ஈட்டம் திசைதொறும் செறிவ செல்ல; |
எத்திய அயில்வேல் குந்தம் - தாக்கி எறியப்பட்டகூர்மையான வேல்கள் எறியீட்டிகள்; எழு, கழு முதல ஏந்தி - இரும்புத்தடிகள் கழுக்கள் முதலிய ஆயுதங்களைத் தரித்து; குத்திய திளைப்ப - குத்தித் திளைப்பதால்; மீதில் குழுவின மழை - மேலே கூடியிருந்த மழையை; மாக்கொண்டல் - பொழியக்கூடிய பெரும் இருண்ட மேகங்கள்; பொத்து உகு பொரு இல் நல் நீர் சொரிவன போவபோல - குத்தப்பட்டுச் சிந்தும் ஒப்பில்லாத நல்ல நீரைச் சொரிவனவாய்ச் செல்வன போல; சித்திரப் பதாகை ஈட்டம் - அழகுள்ள கொடிகளின் கூட்டம்; திசைதொறும் செறிவ செல்ல - எல்லாத் திக்குகளிலும் நெருங்கப் பெற்றனவாய்ச் செல்லவும். ‘பல்லியம்துவைப்ப’ என அடுத்தகவியோடு தொடரும். ‘எற்றிய’ என்பது படைகள் ஏந்திச் சென்ற மிகுதியான கொடிகள் அசைந்து செல்லும் காட்சி உயர்வு நவிற்சியாகப் புனையப்பட்டுள்ளது. வீரர்களின் படைக்கலங்கள் குத்திக் குடைந்ததால் மேகங்கள் சொரிந்த நீர்ப் |