பொழிவுபோல அந்தக்கொடிகள் விளங்கினவாம். படைக்கலங்களின் மிகுதியும் நீட்டமும் குறிக்கப்பட்டன. மேகங்கள் சொரிவனபோல் கொடிகள் சொரிந்தன என்பதும் மிகுதி குறித்த கற்பனையே. (7) 5557. | பல்லியம்துவைப்ப, நல் மாப் பணிலங்கள் முரல, பொன் தேர்ச் சில்லிகள் இடிப்ப, வாசி சிரித்திட, செறி பொன் தாரும் வில்லும் நின்றுஇசைப்ப, யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப, விண்தோய் ஒல் ஒலி வானில்தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ; |
பல் இயம்துவைப்ப - பலவகை வாத்தியங்கள்ஒலிக்கவும்; நல்மாப் பணிலங்கள் முரல - அழகிய பெரிய சங்குகள் முழங்கவும்; பொன் தேர்ச்சில்லிகள் இடிப்ப - பொன் மயமான தேரின் சக்கரங்கள் (வேகமாக உருள்வதால்) ஒலியை உண்டாக்கவும்; வாசி சிரித்திட - குதிரைகள் சிரிப்பன போலக் கனைக்கவும்; செறி பொன்தாரும் வில்லும் நின்று இசைப்ப - அடர்ந்த பொன்னால் அமைந்த கிண்கிணி மாலைகளும் வில்லும் நிலையாக நின்று ஒலிக்கவும்; யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப - யானைகள் பெருமுழக்கத்தை உண்டாக்கிப் பிளிறவும்; விண் தோய் ஒல் ஒலி - (இவ்வாறு தோன்றி) ஆகாயத்தில் சென்ற ஒல் என்னும் ஒலிகள்; வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க - வானில் உள்ள தேவர்கள் பேசும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள முடியாதபடி நீக்கி விடவும். ‘அன்னவன் சேனைசெல்ல’ என அடுத்த கவியைத் தொடரும். ஒல் என்றது ஒலிக்குறிப்பு மன், ஓ. ஈற்றசைகள் (8) 5558. | மின் நகுகிரிகள் யாவும் மேருவின் விளங்கித் தோன்ற, தொல் நகர்பிறவும் எல்லாம் பொலிந்தன, துறக்கம் என்ன- அன்னவன் சேனைசெல்ல, ஆர்கலி இலங்கை ஆய பொன் நகர்தகர்ந்து, பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப. |
|