பக்கம் எண் :

சம்புமாலி வதைப் படலம்553

     அன்னவன்சேனை செல்ல - அந்தச் சம்புமாலியினது படைகள்
செல்வதால்; ஆர்கலி இலங்கை - கடலால் சூழப்பட்ட இலங்கை; ஆய
பொன் நகர் -
என்ற பொன்னால் அமைந்த நகரமானது; தகர்ந்து, பொங்கி,
-
உடை பட்டு, மிகவும் நிறைந்து; ஆர்த்து எழு தூளி போர்ப்ப -
கிளம்புகின்ற புழுதி, (தம் மீது) படிதலால்; மின் நகு கிரிகள் யாவும் - ஒளி
விளங்குகின்ற சாதாரண மலைகளெல்லாம்; மேருவின் விளங்கி தோன்ற -
பொன்மயமான மேரு மலை போலப் பேரொளி கொண்டு விளங்க; தொல்
நகர், பிறவும் எல்லாம் -
பழைய அந்த இலங்கை நகரும் மற்றைய
நகரங்களும்; துறக்கம் என்னப் பொலிந்தன  - பொன்னுலகமான
சுவர்க்கலோகம் போல விளங்கின.

     நகுதல் -விளங்குதல். உரும் ஒத்த’ என்ற பாடல் முதல் இதுவரை வந்த
வினையெச்சங்கள் இச்செய்யுளில் வரும் ‘பொலிந்தன’ என்ற வினைமுற்றைக்
கொண்டு முடிந்தன.                                           (9)

5559.

ஆயிரம்ஐந்தொடு ஐந்து ஆம், ஆழி அம் தடந் தேர்;
                               அத் தேர்க்கு
ஏயின இரட்டியானை; யானையின் இரட்டி பாய் மா;
போயின பதாதி,சொன்ன புரவியின் இரட்டி
                               போலாம்-
தீயவன் தடந்தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற
                               சேனை.  

     தீயவன் தடந்தேர் சுற்றித் தெற்று எனச் சென்ற சேனை -
கொடியவனான சம்புமாலியினது பெரிய தேரைச் சூழ்ந்து விரைவாகச் சென்ற
அரக்கர் படையில்; ஆழி அம் தடம் தேர் - சக்கரங்களை உடைய அழகிய
பெரிய தேர்கள்; ஐந்தொடு ஐந்து ஆயிரம் ஆம் - பத்தாயிரமாகும்; ஏயின
யானை -
அங்குப் பொருந்திய யானைகளின் அளவு; அத்தேர்க்கு இரட்டி -
அத் தேர்த் தொகைக்கு இரட்டிப் புள்ளதாகும்; (இருபதினாயிரம்) பாய் மா -
பாயும் குதிரைகள்; யானையின் இரட்டி - யானைத் தொகையினும் இரு
மடங்காகும்; (நாற்பதினாயிரம்) போயின பதாதி - சென்ற காலாட் படை;
சொன்ன புரவியின் இரட்டி - கீழே கூறப்பட்ட குதிரைத் தொகையினும் இரு
மடங்காகும் (எண்பதினாயிரம்).