பக்கம் எண் :

சம்புமாலி வதைப் படலம்555

 

நிருதியின்பிறந்த வீரர்; நெருப்பு இடை பரப்பும்
                                  கண்ணர்;
பரிதியின்பொலியும் மெய்யர்-படு மதக் களிற்றின்
                                  பாகர்.

     மதம்படுகளிற்றின் பாகர் - மதநீர் தோன்றுகின்றஆண்
யானைகளைச் செலுத்தும் போர் வீரர்கள்; பொரு திசை யானை ஊரும்
புனிதனைப் பொருவும் பொற்பர் -
போர் செய்யும் தன்மையுள்ள (கிழக்குத்)
திக்கின் யானையாகிய ஐராவதத்தைச் செலுத்துகின்ற பரிசுத்தனான இந்திரனை
ஒத்த அழகுடையவர்கள்; சுரி படைத் தொழிலும் மற்றை அங்குசத்
தொழிலும் தொக்கார் -
வாட்படைத் தொழிலிலும் மற்றும் அங்குசம் கொண்
டுயானையைச் செலுத்திப் போர் செய்யும் தொழிலிலும் சேர்ந்து
தேர்ந்தவர்கள்;நிருதியின் பிறந்த வீரர் - நிருதி என்னும் தென் மேற்கு
திசையின் காவல்தெய்வமாகிய பெண்ணின் வழியில் பிறந்தவர்கள்; நெருப்பு
இடை பொழியும்கண்ணர் -
நெருப்பை இடை இடையே பொழியும்
கண்களை உடையவர்கள்;பரிதியின் பொலியும் மெய்யர் - சூரியனைப்
போன்று ஒளிவிட்டு விளங்கும்உடலை உடையவர்கள்.

     நிருதி என்றபெண், தென் மேற்குத் திசைக்குக் காவல் தெய்வம். அவள்
வழியில் தோன்றினமையால் நிருதர் எனப்பட்டனர். அரக்கர்களில் இவர்கள்
ஒரு வகையினர். இது, யானை வீரர் திறம் கூறியது.                 (12)

குதிரைப் படையினர்

5562.

ஏர் கெழுதிசையும், சாரி பதினெட்டும், இயல்பின்
                                   எண்ணிப்
போர் கெழு படையும் கற்ற வித்தகப் புலவர், போரில்,
தேர் கெழுமறவர், யானைச் சேவகர், சிரத்தி்ல்
                                   செல்லும்
தார் கெழு புரவிஎன்னும் தம் மனம் தாவப்
                                  போனார்.

     ஏர் கெழுதிசையும் - (செல்லுதற்கு உரிய) அழகிய திசைகளையும்;
சாரி பதினெட்டும் - பதினெட்டு வகைப்பட்ட சாரிகளையும்; இயல்பின்
எண்ணி -
முறைப்படி சிந்தித்துப்