பக்கம் எண் :

556சுந்தர காண்டம்

பார்த்து; போர்கெழு படையும் கற்ற - போருக்குப் பொருந்திய படைகளின்
தன்மையையும் கற்றறிந்த; வித்தகப் புலவர் - போர்க்கலைத் திறமை மிக்க
அறிஞர்களாகிய (குதிரை) வீரர்கள்; போரில் - போர்க்களத்தில்; தேர் கெழு
மறவர் -
தேர்ப்படை வீரர்கள்; யானைச் சேவகர் - யானைப் படை வீரர்
கள்ஆகியோர்; திறத்தில் செல்லும் - பக்கமாகச் செல்லுகி்ன்ற; தார்
கெழு புரவிஎன்னும் -
கிண்கிணி மாலைகள் அணிந்த குதிரைகள் என்னும்;
தம் மனம்தாவப் போனார் - தங்கள் மனம் முந்தித் தாவுமாறு சென்றனர்.

     கற்ற வித்தகப்புலவர்... தம் மனம் தாவப் போனார் என்று சொற்களை
இணைத்துப் பொருள் கொள்க. வீரப் போருக்குப் பொலிவு தருவன ஆகலின்
(ஏர்) அழகு பொருந்திய திசைகள் என்றார். போர்க் குதிரைகள் சுழன்று வரும்
இயக்கத்தைச் ‘சாரி’ என்பர் போரியலார்; அவை பதினெட்டு என்ப.
போர்க்களத்தில் பிற வகைப் படைகளின் பாங்கர் இயங்குவனவாகலின்
குதிரைப் படையைத் ‘திறத்தில் செல்லும்’ என்றார். பொதுவாக மனப் புரவி
என்பர்; இங்கே புரவி என்னும் மனம் என எதிர்நிலை உருவகமாக வந்தது.
                                                        (13)

5563.

அந் நெடுந்தானை சுற்ற, அமரரை அச்சம் சுற்ற,
பொன்  நெடுந்தேரில் போனான்-பொருப்பிடை
                         நெருப்பின் பொங்கி,
தன் நெடுங்கண்கள் காந்த, தாழ் பெருங் கவசம்
                          மார்பில்
மின்னிட,வெயிலும் வீச,-வில் இடும் எயிற்று வீரன்.

     வில் இடும்எயிற்று வீரன் - ஒளி வீசுகின்றகோரைப் பற்களை
உடைய வீரனான சம்புமாலி; அந் நெடுந்தானை சுற்ற - அவ்வாறான பெரிய
சேனைகள் தன்னைச் சூழ்ந்து வரவும்; அமரரை அச்சம் சுற்ற -
தேவர்களைப் பயம் சூழ்ந்து  கொள்ளவும்; தன் நெடுங் கண்கள் காந்த -
தன் பெரிய கண்கள் கோபத்தால் ஒளி வீசவும்; மார்பில் தாழ் பெரும்
கவசம்மின்னிட வெயிலும் வீச -
மார்பில் தங்கிய பெரிய கவசம்
ஒளிவி்ட்டுமின்னலிடம் தோன்றும் ஒளிபோன்று பிரகாசிக்கவும்; பொருப்பிடை
நெருப்பின் பொங்கி -
மலையிடையே உள்ள நெருப்பு போல சினங்கொண்
டு;பொன் நெடும் தேரில் போனான் - பொன் மயமான பெரிய
தேரில் ஏறிச்சென்றான்.

     சம்புமாலியால்அனுமனுக்கு ஆபத்து வருமோ என்ற ஐயத்தால்,
அமரரை அச்சம் சுற்றியது. பொருப்பினிடையிலுள்ள நெருப்பு, தேரின்