பக்கம் எண் :

சம்புமாலி வதைப் படலம்559

5567.

நின்றனதிசைக்கண் வேழம் நெடுங் களிச் செருக்கு
                                      நீங்க,
தென் திசைநமனும் உள்ளம் துணுக்கென, சிந்தி
                                      வானில்
பொன்றல் இல்மீன்கள் எல்லாம் பூ என உதிர,
                                      பூவும்
குன்றமும்பிளக்க, வேலை துளக்குற, கொட்டினான்
                                     தோள்.

     திசைக்கண்நின்றன வேழம் - எட்டுத் திசைகளிலும்நின்றவையான
திக்கு யானைகள்; நெடும் களிச் செருக்கு நீங்க - (தமது) மதக் களிப்பு
நீங்கவும்; தென் திசை நமனும் - தெற்குத் திக்குப் பாலகனாகிய யமனும்;
துணுக்கு என உள்ளம் சிந்த -
திடுக்கிட்டு மனம் சிதறவும்; வானில்
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர -
ஆகாயத்தி்ல் அழிவு
பெறாத நட்சத்திரங்கள் யாவும் மலர்களைப் போலக் கீழே உதிர்ந்து விழவும்;
பூவும் குன்றமும் பிளக்க -
பூமியும் (அதன் மேலுள்ள) மலைகளும் பிளந்து
போகவும்; வேலை துளக்குற தோள் கொட்டினான் - (அனுமன் தனது)
தோளைத் தட்டினான்.

     பூ - பூமி; மீன்- நட்சத்திரங்கள்.                        (18)

அனுமனை அணுக முடியாதஅரக்கர் தவிப்பு

 

5568. 

அவ் வழி,அரக்கர் எல்லாம், அலை நெடுங் கடலின்
                         ஆர்த்தார்;
செவ் வழிச்சேறல் ஆற்றார், பிணப் பெருங் குன்றம்
                         தெற்றி,
வெவ் வழி குருதிவெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து
                         வீங்க,
‘எவ் வழிச்சேறும்’ என்றார்; தமர் உடம்பு இடறி
                         வீழ்வார்.

     அவ்வழி -அப்போது;அரக்கர் எல்லாம் - போருக்குச் சென்ற
அரக்கர்கள் யாவரும்; அலை நெடும் கடலின் ஆர்த்தார் - அலைகளை
உடைய பெரிய கடல் போல ஆரவாரித்து; பிணப் பெருங்குன்றம் தெற்றி -
பெரிய பிணமலைகள் கிடந்து போகவொட்டாது தடுத்தலாலும்; வெவ் வழி
குருதி வெள்ளம் புடை