மிடைந்து உயர்ந்துவீங்க - வெம்மையுடனே பெருகுகின்ற இரத்தப் பெருக்கு (போகும் இடங்களி்ல் எல்லாம்) நெருங்கி மிக்குப் பெருகுவதாலும்; தமர்உடம்பு இடறி வீழ்வார் - தமது சுற்றத்தவர்களுடைய பிணங்களின் மேல்இடறி வீழ்கின்றவராய்; செவ் வழி சேறல் ஆற்றார் - (அனுமன் உள்ளஇடத்துக்கு) நேரான வழியில் செல்ல முடியாதவர்களாய்; எவ்வழிச் சேறும்என்றார் - எந்த வழியாகப் போய்ச் சேருவோம் என்று செல்லும் வழிதெரியாது திகைத்து நின்றார்கள். செவ்வழி - நேர் வழி;தெற்றுதல் -தடுத்தல். (19) சம்புமாலி அணிவகுத்து வருதலும் அனுமன் போருக்குஅமைந்து நிற்றலும் 5569. | ஆண்டுநின்று, அரக்கன், வெவ்வேறு அணி வகுத்து, அனிகம்தன்னை, மூண்டு இருபுடையும், முன்னும், முறை முறை முடுக ஏவி, தூண்டினன், தானும்திண் தேர்; தோரணத்து இருந்த தோன்றல், வேண்டியதுஎதிர்ந்தான் என்ன, வீங்கினன், விசயத் திண் தோள். |
அரக்கன் ஆண்டுநின்று - சம்புமாலி அங்கிருந்து; அனிகம் தன் னை-தனது சேனையை; வெவ்வேறு அணி வகுத்து - வெவ்வேறு அணியாகப்பிரித்து; இரு புடையும் முன்னும் முறை மூண்டு முடுக ஏவி - அனுமனதுஇரண்டு பக்கங்களிலும் எதிரிலும் முறைமுறையாக மூண்டு விரையும் படிஆணையிட்டு; தானும் திண் தேர் தூண்டினன் - தானும் தனது வலிய தேரைச் செலுத்திக் கொண்டு சென்றான்; தோரணத்து இருந்த தோன்றல் - (அப்போது) தோரணத்தின் மீது அமர்ந்திருந்த அனுமன்; வேண்டியது எதிர்ந்தான் என்ன - தான் விரும்பியது தன்முன் எதிர்ப்பட்டது என்று; விசயத் திண்தோள் வீங்கினன் - தனது வெற்றி தரும் வலிய தோள்கள் பூரிக்கப்பெற்றான். சம்புமாலிசேனையை அணி வகுத்துக் கொண்டு தேரில் வருவதைப் பார்த்து, ‘நாம் நினைத்தது வந்தது’ என்று அனுமன் |