பக்கம் எண் :

564சுந்தர காண்டம்

என்ன நடக்கிறதுஎன்பதை அரக்கர் சேனை அறியுமுன்னே அனுமன்
அவர்களை அழித்தான். இருந்தவன் (அனுமன்) எழுந்து, இழிந்து, உயர்ந்து,
திரிந்து போர் செய்தான்; அவன் செயலை அறியாத அரக்க வீரர்களை
எழுவால் அடித்துக் கொன்றான். இருந்தனன். வினையாலணையும் பெயர்.
எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் திரிந்தனன் - முற்றெச்சங்கள்.      (24)

5574.

எறிந்தன,எய்தன, இடி உரும் என மேல்
செறிந்தனபடைக்கலம், இடக் கையின் சிதைத்தான்,
முறிந்தன தெறும்கரி; முடிந்தன தடந் தேர்;
மறிந்தன பரிநிரை-வலக் கையின் மலைந்தான்.*

     எறிந்தன, எய்தன- அரக்கர்களால் வீசி எறியப்பட்டனவும்,
எய்யப்பட்டனவுமாகிய; இடி உரும் என மேல் செறிந்தன படைக்கலம் -
பேரிடி போலத் தன் மேல் நெருங்கி செறிந்தனவான ஆயுதங்களை எல்லாம்;
இடக் கையின் சிதைத்தான் -
(தனது) இடக்கையால் அழித்துத்தள்ளி; வலக்
கையின் மலைந்தான் -
தன் வலக்கையால் போர் செய்யலானான்; தெறும்
கரி முறிந்தன -
(அதனால்) எதிர்த்து அழிக்கும் வலிமையுள்ளயானைகள்
முறிபட்டு இறந்தன; தடம் தேர் முடிந்தன - பெரிய தேர்கள் சிதைந்து
போயின; பரிநிரை மறிந்தன - குதிரைகளின் கூட்டம் கீழே விழுந்து
இறந்தன.

     அனுமன் தன் இருகைகளாலும் விரைந்து போர் செய்த திறம்
கூறப்பட்டது. சிதைத்தான்; முற்றெச்சம்.                          (25)

5575.

இழந்தனநெடுங் கொடி; இழந்தன இருங் கோடு;
இழந்தன நெடுங்கரம்; இழந்தன வியன் தாள்;
இழந்தன முழங்குஒலி; இழந்தன மதம் பாடு;
இழந்தன பெருங்கதம்-இருங் கவுள் யானை.

     இருங்கவுள் யானை- (அனுமனால் அடிக்கப்பட்ட) மதம் பெருகும்
கன்னத்தை உடைய யானைகள்; நெடுங் கொடி இழந்தன - (தம் மேல்
பிடிக்கப்பட்ட) பெரிய  கொடிகளை இழந்தன;இருங்கோடு இழந்தன - பெரிய
தந்தங்களை இழந்தன;நெடும் கரம் இழந்தன - பெரிய துதிக்கைகளை
இழந்தன; வியன்தாள்இழந்தன - பெரிய கால்களை இழந்தன; முழங்கு
ஒலி இழந்தன -
வீறிடுகின்ற ஒலியை இழந்தன; மதம் பாடு இழந்தன -
மதம் ஒழுகுதலைஇழந்தன; பெருங் கதம் இழந்தன - பெரிய கோபத்தை
இழந்தன.