அனுமனால் யானைப்படைகள் அழிந்தமை கூறப்பட்டது. யானையின் மீது கொடி எடுத்தல் மரபு. கோபத்தைக் காட்ட முடியாதபடி யானைகள் இறந்தன என்பதை பெருங்கதம் இழந்தன என்று குறித்தார். உயிர் இருந்தால்தானே உணர்ச்சியைக் காட்ட முடியும் ? (26) | 5576. | நெரிந்தனதடஞ் சுவர்; நெரிந்தன பெரும் பார்; நெரிந்தன நுகம்புடை; நெரிந்தன அதன் கால்; நெரிந்தனகொடிஞ்சிகள்; நெரிந்தன வியன் தார்; நெரிந்தன கடும்பரி; நெரிந்தன நெடுந் தேர். |
தடம் சுவர்நெரிந்தன - (வீரர்கள் ஏறிவந்ததேர்களினுடைய) சுற்றுப் புறங்கள் நொறுங்கிப் போயின; பெரும்பார் நெரிந்தன - பெரிய அச்சுக் கட்டைகள் நொறுங்கிப் போயின; நுகம் புடை நெரிந்தன - நுகத்தடிகள் பக்கங்களிலே நொறுங்கி்ப் போயின; அதன்கால் நெரிந்தன - அத்தேர்களின் சக்கரங்கள் நொறுங்கிப் போயின; கொடிஞ்சிகள் நெரிந்தன - மேல் தட் டுகள்நொறுங்கிப் போயின; வியன்தார் நெரிந்தன - சிறந்த மாலைகள் நொறுங்கிப்போயின; கடும்பரி நெரிந்தன - அவற்றில் பூட்டப்பட்டுள்ள வேகமானகுதிரைகள் அழிந்து போயின; நெடும் தேர் நெரிந்தன - (முடிவாகப்) பெரியதேர்களே நொறுங்கிப் போயின. தேர்ப்படையின்அழிவு கூறப்பட்டது. தேரின் பல உறுப்புக்கள் கூறப்பட்டுள்ளன. நுகம் - (குதிரைகளைப் பூட்டுவதற்குரிய) குறுக்குக் கட்டை. கொடிஞ்சி; தாமரை வடிவமாகப் பண்ணித் தேரின் முன்னே நடப்படுவதோர் உறுப்பு. கால் - சக்கரம்; பார் - தேரின் அடிப்பாகத்தில் உள்ள நெடுஞ் சட்டம். (27) | 5577. | ஒடிந்தன;உருண்டன; உலந்தன; புலந்த; இடிந்தன;எரிந்தன; நெரிந்தன; எழுந்த; மடிந்தன;மறிந்தன; முறிந்தன; மலைபோல், படிந்தன;முடிந்தன; கிடந்தன-பரி மா. |
பரிமா - வீரர்கள்ஏறிவந்த குதிரைப் படைகள்; ஒடிந்தன உருண்டன உலந்தன - சில உடலுறுப்புக்கள் ஒடியப்பட்டுக் கீழே விழுந்து உருண்டு இறந்தன; புலந்த - துன்பப்பட்டன; இடிந்தன எரிந்தன நெரிந்தன - சில இடிந்து எரிந்து நொறுங்கித் தூளாகப் போயின; எழுந்த - மேலே கிளம்பின; மடிந்தன மறிந்தன முறிந்தன - சில குதிரைகள் எழும் போது, அவற்றின் கால்கள் மடிப்புண்டும், |