பக்கம் எண் :

566சுந்தர காண்டம்

முன்பின்னாகத்திருப்பப் பட்டும் முறிந்து போயின; மலை போல் படிந்தன
முடிந்தன கிடந்தன -
(இவ்வாறு பல குதிரைகள் இந்திரனால் இறகு
முறிக்கப்பட்ட) மலைபோல (தம்முடையகதி) முடியப் பெற்று கீழே விழுந்து
கிடந்தன.

     குதிரைப்படைகளின் அழிவு கூறப்பட்டது. தார் - கிண்கிணிமாலை.  
(28)

5578.

வெருண்டனர், வியந்தனர், விழுந்தனர், எழுந்தார்;
மருண்டனர்,மயங்கினர், மறிந்தனர், இறந்தார்;
உருண்டனர்,உலைந்தனர், உழைத்தனர், பிழைத்தார்;
சுருண்டனர்,புரண்டனர், தொலைந்தனர்;-
                              மலைந்தார்.

     மலைந்தார் -அனுமனோடுபோர் செய்த அரக்கர்களில் (சிலர்);
வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் -
அனுமனது திறத்தைக் கண்டு
அச்சம் கொண்டு வியந்தவண்ணம் கீழே விழுந்தனர்; எழுந்தார் -
விழுந்தவர்களில் சிலர் எழுந்தார்; மருண்டனர் மயங்கினர் மறிந்தனர்
இறந்தார் -
மருண்டும் மயங்கியும் குப்புற விழுந்து இறந்தனர்; பிழைத்தார்
உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் -
(அவ்வாறு இறவாமல்) உயிர்
பிழைத்தவர்களில் சிலர் உருண்டு, வருந்தி உடல் துவண்டு; சுருண்டனர்
புரண்டனர், தொலைந்தனர் -
தமது உறுப்புக்கள் சுருளப் பெற்று, பூமியில்
புரண்டு வலிகெட்டு ஓடிவிட்டனர்.

     இது,காலட்படையின் அழிவு கூறியது.                       (29)

5579.

கரிகொடுகரிகளைக் களப் படப் புடைத்தான்;
பரிகொடுபரிகளைத் தலத்திடைப் படுத்தான்;
வரி சிலை வயவரைவயவரின் மடித்தான்;
நிரை மணித்தேர்களைத் தேர்களின் நெரித்தான்.

     கரி கொடுகரிகளை களப்படப் புடைத்தான் - (அனுமன்)
யானைகளைக் கொண்டே, யானைகளைப் போர்க்களத்தில் இறந்து விழும்படி
அடித்துக் கொன்றான்; பரி கொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான் -
குதிரைகளைக் கொண்டே குதிரைகளைத் தரையில் வீழ்த்தி அழித்தான்; வரி
சிலை வயவரை வயவரின் மடித்தான் -
கட்டமைந்த வில்லை உடைய
வீரர்களை அவ்வீரரில் சிலரை எடுத்து விட்டெறிந்து அழித்தான்; நிரை
மணித் தேர்களை