பக்கம் எண் :

சம்புமாலி வதைப் படலம்567

தேர்களின்நெரித்தான் - வரிசையாக மணிகள்கட்டிய தேர்களை
(அவ்வாறான) தேர்களைக் கொண்டே அழித்துக் குவித்தான்.

    இது, நால்வகைச்சேனைகளையும் அவ்வச் சேனைகளையே தன் போர்க்
கருவியாகக் கொண்டு அனுமன் அழித்ததைக் கூறுவது. வெவ்வேறு
வினைமுற்றுகள்  கொண்டு, அழித்தலாகிய ஒரு முடிபைக் காட்டிய நயம்
உணரத்தக்கது. மேலும், செயலின் கொடுமையை வினைமுற்றுகளின்
வல்லோசை குறிப்பாகப் புலப்படுத்தியதும் காணத்தக்கது.              (30)

5580.

மூளையும்உதிரமும் முழங்கு இருங் குழம்பு ஆய்
மீள் இருங்குழைபட, கரி விழுந்து அழுந்த,
தாளொடும் தலைஉக, தட நெடுங் கிரிபோல்
தோளொடும்நிருதரை, வாளொடும்-துகைத்தான்.

     மூளையும் உதிரமும்- (அரக்கர்களது) மூளைகளும் இரத்தமும்;
முழங்கு இரும் குழம்பு ஆய் -
கொதிக்கின்ற பெரிய குழம்பு போலாகி; மீள்
இரும் குழை பட -
(கண்டவர் அஞ்சி) மீள்கின்ற மிக்க குழை சேறாய் விட;
கரி விழுந்து அழுந்த -
அச்சேற்றில் யானைகள் விழுந்து அழுந்தி இறந்து
போக; தாளொடும் தலை உக - கால்களும் தலைகளும் சிந்திவிழ; தட
நெடும் கிரி போல் நிருதரை - 
பெரிய நீண்ட மலைகளைப் போன்ற
அரக்கர்களை; தோளொடும் வாளொடும் துகைத்தான் - தோள்களோடும்,
(அவர் கையில் கொண்ட) வாளுடனும் (அனுமன் தனது கால்களால்) துகைத்து
அழித்தான்.                                                (31)

5581.

மல்லொடுமலை மலைத் தோளரை, வளை வாய்ப்
பல்லொடும்,நெடுங் கரப் பகட்டொடும், பருந் தாள்
வில்லொடும், அயிலொடும், விறலொடும், விளிக்கும்
சொல்லொடும், உயிரொடும் நிலத்தொடும்,-
                                துகைத்தான்.

     மல்லொடு மலை -மல்யுத்தத்தில போர் செய்யும்; மலைத் தோளரை
-
மலை போன்ற தோள்களை உடைய வீரர்களை; வாய் வளை பல்லொடும்
-
அவர்களுடைய வாயில் உள்ள வளைந்த பற்களோடும்; நெடும் பகடு
கரமொடும் -
நீண்ட வலிய கைகளோடும்; பரும் தாள் வில்லொடும்
அயிலொடும் -
(அவர்கள் கைகளில் கொண்ட) பருத்த அடியை உடைய
வில்லுகளோடும்,