பக்கம் எண் :

568சுந்தர காண்டம்

வேல்களோடும்; விறலொடும் - வீரத்தோடும்; விளிக்கும் சொல்லொடும் -
கூவுகின்ற சொற்களோடும்; உயிரொடும் -  அவர்கள் உயிர்களோடும்; நிலத்
தொடும் துகைத்தான் -
பூமியோடு பூமியாய் அழுந்த மிதித்து அழித்தான்.

     பகடு - வலிமை;‘பகட்டு மார்பின்’ (புற, நா, 88,4)             (32)

5582.

புகை நெடும்பொறி புகும் திசைதொறும்
                         பொலிந்தான்;
சிகை நெடுஞ்சுடர் விடும் தேர்தொறும் சென்றான்;
தகை நெடுங்கரிதோறும், பரிதொறும், சரித்தான்;
நகை நெடும்படைதொறும், தலைதொறும், நடந்தான்.

     புகை நெடும்பொறி புகும் திசை தொறும் பொலிந்தான் -
புகையோடுகூடிய நீண்ட நெருப்புப் பொறி (சினத்தீ) செல்லும் இடங்களில்
எல்லாம் சென்று விளங்குபவனாகிய அனுமன்; சிகை நெடும் சுடர் விடும்
தேர்தொறும் சென்றான் -
சிகரங்களினின்று நீண்ட ஒளி விடும் தேர்கள்
இருக்குமிடம் எல்லாம் சென்றான்; தகை நெடும் கரிதொறும் பரிதொறும்,
சரித்தான் -
சிறப்பமைந்த பெரிய யானைகள் குதிரைகள் இருக்கும்
இடங்களில் எல்லாம் சஞ்சரித்தான்; நகை நெடும் படை தொறும் -
(தன்னைப் பார்த்து அற்பக்குரங்கு என்று) ஏளனம் செய்து சிரித்த போர்ப்
படைகள் தோறும்; தலை தொறும் நடந்தான் - அப்படையில் உள்ள
வீரர்கள் தலை தோறும் நடந்து சென்று அவர்களை அழித்தான்.

    பொலிந்தான்;வினையாலணையும் பெயர். (பொலிந்தவன்)        (33)

5583. 

வென்றிவெம் புரவியின் வெரிநினும், விரவார்
மன்றல் அம்தார் அணி மார்பினும், மணித் தேர்
ஒன்றின்நின்றுஒன்றினும், உயர் மத மழை தாழ்
குன்றினும்,-கடையுகத்து உரும் எனக் குதித்தான்.

     வென்றிவெம்புரவியின் வெரிநினும் - வெற்றியைத் தரத்தக்கவலிய
குதிரைகளின் முதுகிலும்; விரவார் மன்றல் அம் தார் அணி மார்பினும் -
பகைவர்களான அரக்க வீரர்களது நறுமணம் உள்ள மாலைகள் அணிந்த
மார்புகளிடத்தும்; மணித்தேர் ஒன்றின் நின்று ஒன்றினும் - மணிகள்
கட்டப்பெற்ற தேர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிலும்; உயர் மத மழை தாழ்
குன்றினும் -
உயர்ந்தோங்கிய