| 5585. | அண்ணல்-அவ் அரியினுக்கு அடியவர் அவன் சீர் நண்ணுவர் எனும்பொருள் நவை அறத் தெரிப்பான், மண்ணினும்,விசும்பினும், மருங்கினும், வலித்தார் கண்ணினும்,மனத்தினும்,-தனித் தனி கலந்தான். |
அண்ணல் -பெரியோனாகிய அனுமன்; அவ் அரியினுக்கு அடியவர் - அந்தத் திருமாலுக்கு அடியவர்கள்; அவன் சீர் நண்ணுவர் எனும் பொருள் - அவனுக்குரிய சிறப்புக்களை அடைவர் என்று கூறப்படும் சாத்திரப் பொருளை; நவை அறத் தெரிப்பான் - குற்றமில்லாமல் (செவ்வனே) தெரி்விப்பவனாய்; மண்ணினும் விசும்பினும் மருங்கிலும் - பூமியிலும் வானத்திலும் பக்கங்களில் உள்ள திக்குகளிலும்; வலித்தார் - வலிமை கொண்டு போரிட்ட அரக்கர்களுடைய; கண்ணினும் மனத்தினும் - கண்ணுக்கு எதிரிலும் மனத்திலும்; தனித்தனி கலந்தான் - ஒவ்வொருவரிடமாகவும் கலந்து விளங்கினான். (36) | 5586. | கொடித்தடந் தேரொடும் குரகதக் குழுவை அடித்து, ஒரு தடக்கையின் நிலத்திடை அரைத்தான்; இடித்து நின்றுஅதிர் கதத்து, எயிற்று வன் பொருப்பை, பிடித்து, ஒருதடக் கையி்ன், உயிர் உகப் பிழிந்தான். |
குரகதக் குழுவை -குதிரைக்கூட்டங்களை; கொடித் தடம் தேரொடும் - கொடி கட்டிய பெரிய தேர்களோடும்; ஒரு தடக் கையின் அடித்து - ஒரு பெரிய கையால் அடித்து; நிலத்திடை அரைத்தான் - தரையிலே தேய்த்தான்; கதத்து இடித்து நின்று அதிர் - சினத்தினால் கர்ச்சித்து நின்று பேரொலி செய்கின்ற; எயிற்றுவன் பொருப்பை - தந்தங்களை உடைய வலியமலை போன்ற யானைகளை; ஒரு தடக்கையின் பிடித்து - மற்றொரு பெரிய கையினால் பிடித்து; உயிர் உகப் பிழிந்தான் - அவற்றின் உயிர் சிந்தப் பிழிந்து கொன்றான். பொருப்பு; யானை. உவமை ஆகுபெயர். எயிற்று வன் பொருப்பு எனத் தந்தங்களை உடைய மலை என யானையை உருவகித்தார். (37) | 5587. | கறுத்து எழுநிறத்தினர், எயிற்றினர், கயிற்றார், செறுத்து எரிவிழிப்பவர், சிகைக் கழு வலத்தார், |
|